பில்லி சூனியத்தில் எலுமிச்சை பயன்படுத்துவது ஏன்..?

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

இன்றைய நவீன அறிவியல் யுகத்திலும் பில்லி சூனியங்கள், பேய் விரட்டுதல், குட்டி சாத்தான் ஏவுதல் போன்ற நம்ப முடியாத, அதே சமயம் அறிந்துகொள்ள முடியாத அமானுஷ்ய விஷயங்களும் நடந்து வருகின்றது. இந்த மாதிரியான விஷயங்களுக்கு எலுமிச்சை தான் அதிகம் பயன்படுகின்றது. இதற்கு காரணம், எலுமிச்சை பழம் பேய்களை தொடர்பு கொள்வதில் சிறந்த மீடியமாக செயல்படுகின்றது என அனைவராலும் நம்பப்படுகின்றதாம். அதுமட்டுமின்றி, லட்சுமி தெய்வத்தின் சகோதரியாக கருதப்படும் அவலட்சுமி தெய்வத்திற்கு புளிப்பான பொருள் பிடிக்கும் என்றும் கருதி எலுமிச்சை பயன்படுத்தப் படுகின்றது. லட்சுமி தெய்வம் நல்லது செய்வதாகவும், அவலட்சுமி கெட்ட எண்ணங்களையும், தீமைகளையும் உண்டு பண்ணுவதாகவும் நம்புகின்றனர். மேலும், பில்லி சூனியத்தின் போது ஆணிகள், முட்கள் போன்ற கூரான பொருட்களும் பயன்படுத்தப் படுமாம். அவைகளைக் கொண்டு எளிதில் துளையிடவும், அதிக நீர்ச்சத்து உள்ள பழங்கள் தேவை என்பதாலும் எலுமிச்சை பயன்படுத்தப் படுகின்றதாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close