முட்டை ஓட்டில் இவ்ளோ மேட்டர் இருக்கா...???

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருக்களில் எவ்வளவு சத்துக்கள் உள்ளதோ அதே அளவு முட்டையின் ஓட்டிலும் உள்ளதாம். முட்டை ஓடுகள் கால்சியம் கார்பனேட்டுகளால் உருவாகி உள்ளது. ஒரு முட்டை ஓட்டில் 750-800 மி.கி வரை கால்சியம் உள்ளதாம். இதுமட்டுமின்றி வீணாக தூக்கி எரியும் முட்டை ஓடுகளை வேறு விதமாகவும் பயன்படுத்தலாம். முட்டையின் ஓட்டை அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தலாம். அதாவது முட்டையின் ஓட்டை சிறு துண்டுகளாக உடைத்து, அதில் விரும்பிய வண்ணங்களில் பெயிண்ட் அடித்து, துண்டுகளை பசையால் ஒட்டி ஒரு மாடர்ன் ஆர்ட் போல் ஏதேனும் வரையலாம். முட்டையின் ஓட்டைக் கொண்டு, சமையலறைக் குழாயில் உள்ள அடைப்புக்களை போக்க முடியும். அதற்கு முட்டையின் ஓட்டை பொடி செய்து, இரவில் தூங்கும் முன் குழாயில் தூவி விட்டு, பின்னர் அதில் சிறிது வினிகரை ஊற்றினால், நல்ல பலன் கிடைக்கும். மெழுகுவர்த்தி உருகி வீணாகாமல் இருக்க, காய்ந்த முட்டை ஓட்டில் மெழுகை ஊற்றி திரி போட்டு மெழுகுவர்த்தியாகவும் பயன்படுத்தலாம். காய்கறி மற்றும் பழச் செடிகளில் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கு, அந்த செடியைச் சுற்றி, முட்டையின் ஓட்டை பொடி செய்து தூவினால், பூச்சிகள் வராமல் இருப்பதோடு, செடியும் நன்கு வளமாக வளரும். இதை படித்த பிறகும், முட்டை ஓடுகளை வேஸ்ட் பண்ணிடாதீங்க..

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close