ஏப்ரல் 2 - உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஆட்டிசம் என்பது பலரும் நினைப்பதுபோல வியாதி இல்லை. நரம்பியல் குறைபாடு காரணமாக மூளையின் செயல்திறனில் ஏற்படும் மாற்றம்தான். போதுமான வழிகாட்டுதலும் பயிற்சிகளும் இருந்தால் இதிலிருந்து மீள்வதற்கு வழிகள் உண்டு. குழந்தைகளின் செயல்பாடுகளில் தெரியும் மாற்றத்தை வைத்தே ஆட்டிசத்தை கண்டறிய முடியும். குழந்தைகள் அழாமலும், தனக்கு தேவையானதை சுட்டிக்காட்டாமலும் இருப்பது. ஒன்றரை வயது வரை, ஒரு சொல் வார்த்தைகளையோ, இரண்டு வயது வரை இரண்டு சொற்கள் கொண்ட சொற்றொடரையோ பேசாமல் இருப்பது. பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காமல் இருப்பது. வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் இருப்பது, பேசுகிறவரின் முகத்தையோ, கண்ணையோ பார்க்காமல் வேறெங்கோ பார்வையை அலையவிடுவது. எதற்குமே சிரிக்காமல் இருப்பது இவையெல்லாம் ஆட்டிசத்தின் அறிகுறிகள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close