பாம்பிற்கு பாலும், முட்டையும் வைப்பது ஏன்..???

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக பாம்புகள் இருந்தன. காரணம், அடர்ந்த காடுகள் மத்தியில் மனித நடமாட்டம் மிகமிகக் குறைவு. மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது. ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை. அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள். ஆகவே அதனைக் கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர். பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தன் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை (pheromones) வெளியிடும். அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி வரும். பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையைக் கட்டுப்படுத்தும் வேலையை, பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுத்து விடும். ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது என்பதாலேயே இந்த முறையை கடவுள் நம்பிக்கை என்று சொல்லி பின்பற்றி வந்துள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close