கல்லா கட்டும் திருநங்கை பொம்மைகள்

  jerome   | Last Modified : 06 Apr, 2017 11:02 pm

உலகிலேயே முதல் முறையாக உருவாக்கப்பட்ட திருநங்கை பொம்மைகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த திருநங்கை பொம்மை, டோன்னர் பொம்மை தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வடிவமைத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஹாலிவுட் படங்களில் வரும் முக்கிய கதாபாத்திரங்களை பொம்மைகளாக வடிவமைப்பதில் அதிக ஆர்வம் காட்ட கூடிய ஒன்று. ஆனால், இந்த பொம்மை, ஆணாக பிறந்து பெண்ணாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஜாஸ் ஜென்னிங்ஸ் என்ற சமூக ஆர்வலர் ஒருவரை வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. இவர் 'I Am Jazz' என்ற திருநங்கைகள் குறித்த ஆவணப்படமும் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, ஜாஸ் ஜென்னிங்ஸ் தனது ஆறு வயதில், பாலின அடையாள கோளாறு குறித்து யு.எஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது பிரபலம் அடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 18 இன்ச் அளவுடைய இந்த பொம்மைகள் ரூ.6000 வரை விலை போகின்றது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close