எலி போன்ற குட்டி மான்கள்

  jerome   | Last Modified : 06 Apr, 2017 09:58 pm

'ஜாவா மான்கள்' என்று அழைக்கப்படக்கூடிய எலி மான்கள் உலகில் அழிந்து வரும் மான் இனங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. வெறும் 30 செ.மீ உயரமும் 1-2 கி.கி எடையளவே உடைய இவை கடல் மட்டத்தில் இருந்து 700 மீ உயரம் உடைய காடுகளில் வசித்து வருகின்றன. இதன் தலை மற்றும் கழுத்துப்பகுதி எலி போலவே காணப்படுகின்றது. இவற்றின் கால்கள் மிகவும் ஒல்லியாக பென்சில் போன்ற அமைப்பில் உள்ளது. நாள் ஒன்றுக்கு 1-5 கிராம் எடையுள்ள உணவே இவற்றிற்கு போதுமானதாக இருக்கின்றது. உலகளவில் மிக மிகக் குறைவான அளவிலேயே காணப்படும் இவற்றில் ஒரு மான் கடந்த 2015-ல் நெதர்லாந்தில் உள்ள Natura Artis Magistra வனவிலங்கு சரணாலயத்தில் குட்டி ஈன்றது குறிப்பிடத்தக்க ஒன்று.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close