இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்போன்கள் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அதேசமயம் வைரஸ்கள் மூலம் தகவல் திருடப்படுவதும் நடந்து வருகிறது. ரஷ்யாவைச் சேர்ந்த இணைய பாதுகாப்பு நிறுவனமான கேஸ்பர்ஸ்கி லேப் நடத்திய 'மொபைல் வைராலஜி' என்ற ஆய்வில், கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் சுமார் 85 லட்சம் வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 50% புதிய வைரஸ்கள் இனம் காணப்பட்டுள்ளது.
இதை உடனடியாக சரி செய்யாவிடில் உங்களின் சொந்தத் தகவல்கள் திருடப்படவும் வாய்ப்புகள் இருக்கின்றது. இதிலிருந்து தப்பிக்க சில எளிய முறைகளை செய்தாலே போதுமானது.
1. உங்களின் ஸ்மார்ட்போனுக்கு ஆன்ட்டி வைரஸ் அப்ளிகேஷன் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
2. சரியான IMEI எண் உடைய மொபைல் போன்களை வாங்கவும்.
3. ஆன்ட்டி வைரஸ் அப்ளிகேஷனை பயன்படுத்தி அடிக்கடி உங்கள் மொபைலை ஸ்கேன் செய்ய வேண்டும்.
4. இணையதளங்களில் இருந்து தேவையில்லாத இமேஜ் மற்றும் வீடியோக்களை டவுன்லோட் செய்வதை தவிர்க்கவும்.
5. ப்ளூ டூத் மூலம் தகவல் பரிமாற்றம் முடித்தவுடன் அதை நான்- டிஸ்கவரபிள் (மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாத) மோடிற்கு மாற்றிவிடவும்.
6. முறையான பாஸ்வேர்டுகளை பயன்படுத்தவும்.
இவைகளை செய்தாலே மொபைல் போன்களை வைரஸ் அட்டாக்கில் இருந்து காப்பாற்றலாம்.