AC யை ON பண்ணப் போறீங்களா...??? இதை கொஞ்சம் படிங்க...

  jerome   | Last Modified : 08 Apr, 2017 07:37 pm

ஒரு காலத்தில் ஏ.சி. என்பது வசதியானவர்களின் ஆடம்பர பொருளாக இருந்தது. ஆனால், இன்றோ பெரும்பாலான வீடுகள் மற்றும் அலுவலகங்கள் ஏ.சி. வசதியுடன் தான் செயல்படுகின்றன. ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட அறைகளில் அமர்ந்து வேலை செய்வதால் உடலியல் சார்ந்த பல பிரச்சனைகள் உண்டாகுமென்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஏ.சி. யிலிருந்து குளிர் காற்றைப் பெறுவதற்காக 'குளோரோ ப்ஃளோரோ கார்பன்' மூலப் பொருளாகப் பயன்படுகிறது. இந்த மூலப்பொருள் தான் புவி வெப்பமடைதலை அதிகமாக்கி, ஓசோன் ஓட்டையை அதிகப்படுத்துகிறது. மேலும் அலர்ஜி பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏ.சி. காற்று பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அலர்ஜி உள்ளவர்களுக்கு உடலில் அரிப்பு, மூக்கில் சளி ஒழுகுதல், காதில் அரிப்பு, கண் எரிச்சல் போன்றவை ஏற்படக்கூடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை ஏ.சி.யில் உள்ள தூசி மற்றும் அழுக்குகளை முறையாக சுத்தப்படுத்த வேண்டும். இல்லையெனில், அவற்றில் 'லிஜினல்லா நிமோஃபிலியா' என்ற பாக்டீரியா வளரும். இது ஏ.சி.யில் மட்டும் வளரக்கூடிய பாக்டீரியா. நம் சுவாசப் பாதையில் இந்த பாக்டீரியா பரவினால் நிமோனியாவை உருவாக்கும். சில வீடுகளில் விண்டோ ஏ.சி.யின் பின்பக்கம் புறாக்கள் வசிக்க ஆரம்பிக்கும். புறாக்களின் கழிவுகள் அதில் சேர்ந்து பூஞ்சைகள் வளரும். 'க்ரிப்டோகாக்கஸ்' எனப்படும் இந்த பூஞ்சையானது நம் சுவாசப் பாதையையும், மூளையையும் தாக்கி 'க்ரிப்டோகாக்கல் மெனிஞ் சைட்டிஸ்' எனும் நோயை உருவாக்கக் கூடியது. எந்த நேரமும் ஏ.சி.யில் அமர்ந்திருப்பவர்களுக்கு, சூரிய ஒளி போதுமான அளவு கிடைக்காது. இதனால் வைட்டமின் டி குறைபாடு உருவாகும். இந்த வைட்டமின், கருவுறுதலில் ஆரம்பித்து இதயம், நுரையீரல் சீராக இயங்குவது வரை தேவைப்படும் ஒன்றாகும். இது கிடைக்காமல் போனால் எலும்புகள் பலவீனமடையும். மூட்டுவலி, முதுகுவலி போன்றவை எளிதாக வரும். கோடை வெயிலுக்கு இதமாக இருக்குமென்று ஏ.சி. பயன்படுத்தினாலும், அதை சரியான முறையில் அளவோடு பயன்படுத்தினால் பல ஆபத்துகளை முன் கூட்டியே தவிர்க்கலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close