டைட்டானிக்கின் கன்னிப் பயண நினைவு தினம்

  mayuran   | Last Modified : 10 Apr, 2017 01:13 pm

உலகையே மிகவும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவங்களில் ஒன்றான டைட்டானிக் கப்பல் மூழ்கியதை யாராலும் மறந்திருக்க முடியாது. 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதலும், கடைசியுமாக தன் பயணத்தை தொடங்கிய டைட்டானிக் கப்பல் மூழ்கியதை நினைவு கூரும் விதமாக இன்று உலகம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. டைட்டானிக் அதன் கன்னிப்பயணத்தை இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயார்க் நகரை நோக்கி புதன்கிழமை, ஏப்ரல் 10, 1912 இல் கேப்டன் எட்வர்ட் ஸ்மித் தலைமையில் தொடங்கியது. அந்த துறைமுகத்தில் இருந்து பிரான்சில் சேர்பூர்க்கில் நிறுத்தப்பட்டு மேலும் பயணிகள் ஏற்றப்பட்டனர். மீண்டும் அடுத்த நாள் அயர்லாந்து, குயின்ஸ் டவுன் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு நியூயார்க்கை நோக்கி 2,240 பயணிகளுடன் செல்லத் தொடங்கியது. நியூயார்க்கை நோக்கி சென்று கொண்டிருந்த போது காலநிலை மாற்றம் காரணமாக பனிப்பாறைகள் அதிகளவு இருப்பதாக டைட்டானிக் கப்பலுக்கு தகவல் அனுப்பப்பட்டது. ஆனால் தகவல்கள் அங்கு வந்தடையவில்லை. ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 14 ஆம் தேதி இரவு 11.40 மணிக்கு பெரும் பனிப்பாறையுடன் மோதி விபத்துக்குள்ளானது. அந்த கப்பலில் மொத்தமாக 20 உயிர் காப்பு படகுகள் மட்டுமே இருந்தது. அதனால் பயணம் செய்த 2,240 பேரில் 706 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். பெரும்பாலானோர் -2 டிகிரி செல்சியஸ் குளிரினால் உறைந்து போய் உயிரிழந்தனர். கப்பலின் சேதமடைந்த பகுதிகளை செப்டம்பர் 1, 1985 இல் ராபர்ட் பலார்ட் தலைமையிலான ஆய்வாளர் குழு ஒன்று கண்டு பிடித்தது குறிப்பிடத்தக்கது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.