இதுக்கு கூட ஆணுறையை பயன்படுத்தலாமா....???

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பால்வினை நோய்களில் இருந்து காப்பற்றிக் கொள்ளவும், கருத்தரித்தலை தவிர்க்கவும் உருவாக்கப்பட்ட ஆணுறைகளை கியூபா மக்கள் ஒயின் தயாரிப்பிற்கு பயன்படுத்துகின்றனர். கியூபாவில் ஒயின் தயாரிப்பு குடிசைத் தொழிலாக செயல்பட்டு வருகின்றது. இதன் மூலம் நபர் ஒருவர் மாதம் 2000 ரூபாய் வரை வருமானம் பெறுவதாக அந்நாட்டு பத்திரிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ஒயின் தயாரிப்பின் போது திராட்சையுடன் வினிகர் சேர்க்கப்பட்டு நொதித்தல் நிகழ்விற்கு உட்படுத்தப்படும். இந்த நொதித்தலில் கார்பன்-டை-ஆக்ஸைட் வாயு வெளியேறினால் மட்டுமே ஒயின் தயாராகிவிட்டது என்று அறிய முடியும். எனவே நொதித்தலுக்கு பயன்படுத்தப் படும் ஜார்களின் வாய்ப்புறத்தில் ஆணுறைகளை வைத்து மூடி விடுகின்றனர். கார்பன்-டை-ஆக்ஸைட் வெளியேறும்போது ஆணுறை விரிவடைந்து பலூன் போல ஆகிவிடுவதை வைத்து ஒயின் தயாராகி விட்டதை தெரிந்து கொள்கின்றனர். மேலும், கியூபாவில் மக்கள் தொகை குறித்து அதிக விழிப்புணர்வு இருப்பதால் அங்கு பலூன்களை விட ஆணுறைகளின் விற்பனை அதிகம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close