டென்னிஸ் பந்தை விழுங்கிய மலைப்பாம்பு

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து வனப்பகுதியில் 5 அடி நீள மலைப்பாம்பு ஒன்று டென்னிஸ் பந்தை விழுங்கியதை அப்பகுதி கால்நடை மருத்துவர்கள் கண்டறிந்து காப்பாற்றி உள்ளனர். கிட்டத்தட்ட 20 நிமிட போராட்டத்திற்கு பிறகு அந்த மலைப்பாம்பு பந்தை கக்கி உள்ளது. இதற்காக மருத்துவர்கள் அந்த பாம்பின் தொண்டை பகுதியில் பிளாஸ்டிக் குழாயை உட்செலுத்தி அதனுடன் பாரஃபின் எண்ணெயையும் செலுத்தி பந்தை எடுத்து உள்ளனர். இதுகுறித்து அந்த மருத்துவர்கள், "டென்னிஸ் பந்தின் வெளிப்பகுதி பறவைகளின் இறகைப் போல மிருதுவாக இருப்பதால் இரை என நினைத்து சாப்பிட்டிருக்கும்" எனக் கூறி உள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close