எவரெஸ்ட் சிகரத்தில் 'பார்ட்டி' கொண்டாட்டம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உலகளவில் பிரபலமான பிரிட்டனைச் சேர்ந்த DJ பால் ஓகேன்ஃபோல்ட், எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறும் வீரர்களுக்காகவும், உலக வெப்ப மயமாதல் குறித்த விழிப்புணர்விற்காகவும் எவரெஸ்ட் மலைப்பகுதியில் DJ பார்ட்டி ஒன்றை நடத்தி உள்ளார். 53 வயதான பால் இதற்காக 4 மாதங்கள் மலையேறும் பயிற்சி பெற்று அதன்பின் 10 நாட்கள் பயணித்து இந்த பார்ட்டியை நடத்தி உள்ளார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100 மலையேறும் சாகசப் பிரியர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இது குறித்து பால் கூறுகையில், "இந்த அனுபவம் மிகவும் அற்புதமாக இருந்தது. உண்மையில் நான் அதிர்ஷ்டசாலி" என்று நெகிழ்ந்து பேசியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close