உயரமான ஆண்களை கொண்ட நாடு இதுதான்...!!!

  jerome   | Last Modified : 12 Apr, 2017 05:33 pm
தென் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினா நாட்டின் ஆண்கள் அனைவரும் சராசரியாக 183.4 செ.மீ அதாவது 6 அடிக்கு மேல் உயரம் உடையவர்களாக இருக்கின்றனர். இதற்கு என்ன காரணம் என்று 1895-ஆம் ஆண்டிலிருந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு விடை 2015-16 ல் நடந்து முடிந்த ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இந்த நாட்டில் உள்ள 17-20 வயதுக்குட்பட்ட 2500 இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அவர்களின் உடலில் உள்ள Y குரோமோசோம்கள் குறித்து ஆராயப்பட்டது. Y குரோமோசோம்களில் உள்ள I-M170 என்ற ஒரு காரணி மட்டும் மற்ற நாட்டு ஆண்களில் இருந்து வேறுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. I-M170 காரணி, சுமார் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பாலியோலித்திக் கிராவிடியன் கலாச்சாரத்தை சேர்ந்த மக்களிடம் இருந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close