ஹெல்மெட் உருவானது இப்படி தான்...!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கி.மு 900 ஆம் ஆண்டில் அசிரியன் பேரரசு காலத்திலேயே போர் வீரர்கள் தலைக்கவசம் பயன்படுத்தி வந்ததாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் தற்போது நாம் பயன்படுத்தி வரும் ஹெல்மெட்கள் கண்டுபிடிக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. 1914-லேயே ஹெல்மெட்டைக் கண்டுபிடிப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகள் இங்கிலாந்தில் தொடங்கின. அந்நாட்டில் நடந்து வந்த மோட்டார்சைக்கிள் பந்தயங்களில், அதிவேகமாக செல்லும் வீரர்கள், கீழே விழுந்து அடிபடுவது சர்வ சாதாரணமாக இருந்தது. அடிபட்ட பலர் 'கோமா' வில் பல ஆண்டுகள் படுத்திருந்த நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில் தான், எரிக் கார்ட்னர் என்ற மருத்துவரின் ஆலோசனையுடன் மோஸ் என்ற டிசைனர் உறுதியான, இலகுவான தலைக்கவசத்தை தயாரித்தார். இதையடுத்து பந்தய வீரர்களுக்கு தலைக்கவசம் கட்டாயம் என்ற விதி கொண்டு வரப்பட்டது. பல வீரர்கள் ஆரம்பத்தில் இதை எதிர்த்தாலும், கட்டாயம் காரணமாக அணிந்துகொண்டதால் தலையில் அடிபடுவது கணிசமாகக் குறைந்தது. இதனால் தலைக்கவசத்தின் மகத்துவம் உலகெங்கும் பரவத் தொடங்கி, தலைக்கவசம் உயிர் காக்கும் கவசமாக மாறியது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close