ஆளுமை திறனை வளர்ப்போம்

Last Modified : 13 Apr, 2017 02:34 pm

நம் நாட்டில் சிலர், சக மனிதர்களை அடக்கி ஆள விரும்புகிறார்கள் இதனை ஆளுமை என்றும் நினைக்கிறார்கள். ஆனால் இதுவா ஆளுமை ? கிடையாது.. ஒருவர் அகங்காரமும், அணிகலன்களும், ஆடம்பரங்களும் கொண்டவராக இருந்தால் அவர் ஆளுமை பெற்றவரா இல்லவே இல்லை . ஆயிரம் கோடி மக்கள் கொண்ட உலகில் அப்துல் கலாமும், நெல்சன் மன்டேலாவும், காந்தியும் மிளிர காரணம் அவர்களது ஆளுமை திறனே. ஆங்கிலத்தில் ஆளுமையை personality என்பர். இலத்தின் மொழியில் இருந்துவந்த இந்த வார்த்தையின் (personae) பொருள் மறைப்பு, முகமூடி.. இதில் எனது சந்தேகம் என்னவென்றால் முகமூடி அணிந்து வாழும் வாழ்க்கை தான் personalityயா? என் மொழியில் ஆளுமைத்தன்மையின் சில இயல்புகளாக அறிவுபூர்மான சிந்தனைகளும் தனியாக சிந்திக்கும் திறன், உறுதி, நேர்மை, ஒழுக்கம், எதையும் முடிவெடுக்கும் திறன், நம்பிக்கை, திடம், சூழலுக்கேற்ப நடப்பது மட்டுமல்லாது ஒரு குறிப்பிட்ட முறையில் நடப்பதுமாகும். எந்த வித வாகனத்தில் செல்கிறோம், எத்தனை புத்தகங்கள் படிக்கிறோம் என்பது முக்கியமில்லை நம்மை எவ்வாறு தரமேற்றி கொள்கிறோம் என்பது தான் முக்கியம். நடுத்தர நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அண்ணா மேடையில் முழங்குவதில் சிறந்து விளங்கவும், தமிழக முதல்வரானதும், ஆங்கிலேயருக்கு நிகராக பேசுவதில் புலமை பெற்றதும் அவரது ஆளுமையே காரணம். ஆளுமை மேம்பாட்டுக்கு வாழும் இடம் ஒரு காரணம் என்றாலும் நாம் எப்படிப்பட்டவர்களாக நம்மை மாற்றிக்கொள்கிறோம் என்பது் மிகவும் முக்கியம். நம்மை நாமே செதுக்கி கொண்டாலே ஆளுமையை வளர்த்து கொள்ளலாம். இன்றைய நாள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் !!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close