பிறந்த குழந்தையைப் பற்றி தெரியாத தகவல்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

குழந்தைகளை யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் பிறந்த குழந்தைகளைப் பார்த்தா போதும் அப்படியே குழந்தையைத் தூக்கி கொஞ்ச நினைக்கும் மனசு. எல்லாமே தெரிஞ்ச நமக்கு குழந்தைகள பற்றி தெரியாத சில விஷயங்களும் இருக்கு அது என்னன்னா? பிறந்த குழந்தை தாயிடம் வந்ததும் தன் அழுகையை நிறுத்திவிடும். எப்படியெனில் கருவில் இருக்கும் போதே, தன் தாயின் குரல் மற்றும் ஸ்பரிசம் நன்கு தெரியும். பிறந்த குழந்தையால் 20 அடி தூரத்தில் இருப்பதை மட்டுமே காண முடியும். சராசரி மனிதனால் 600 அடி வரையுள்ள அனைத்தையும் காண முடியும். பிறந்த குழந்தையால் மனித முகத்தை நன்கு அடையாளம் காண முடியும். மேலும் பிறந்த குழந்தைகளுக்கு பொம்மைகளை விட, ஒருவரின் முகத்தைக் காண பிடிக்கும். அதனால் தான் பிறந்த குழந்தைகள் ஒருவரைக் காணும் போது புன்னகைக்கின்றன. சராசரி மனிதனின் உடலில் 206 எலும்புகள் இருக்கும். ஆனால் பிறந்த குழந்தைக்கோ ஆரம்பத்தில் 270 எலும்புகள் இருக்கும். அவர்கள் வளர வளர மண்டை ஓடு மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் உள்ள எலும்புகள் இணைந்து 206 எலும்புகளாகின்றன. குழந்தைகள் பிறந்ததும் அவர்களின் தலை மற்றும் சருமத்தில் மென்மையான முடிகள் அதிகம் இருக்கும். ஆனால் ஒரு சில வாரங்களில் அந்த முடி தானாக உதிர்த்துவிடும். இருப்பினும் தலையில் உதிர்ந்த முடிகள் அடுத்த சில வாரங்களில் நன்கு வளர ஆரம்பிக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close