குறையை நிறையாக்குவோம் ....

Last Modified : 01 Jan, 1970 05:30 am
நானும் எவ்வளவோ உழைக்கிறேன் என்ன குறைனே தெரில என்னால மட்டும் ஜெயிக்கவே முடில அப்படினு புலம்பி தள்ளுற ஆளுங்கள நீங்களும் ஒருவரா ?அப்போ இந்த பகுதி உங்களுக்கானது தாங்க தயங்காம படிங்க .... ஒரு சிறு கதை மூலமா இதை சொல்லுறேன். ஒரு கிறிஸ்த்துவ தேவாலயத்தில் புதிதாக ஒரு போதகர் வருகிறார். அங்கு உள்ள அனைவருக்கும் கையெழுத்து போடும் அளவுக்காவது எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும் என கட்டளையிடுகிறார். அப்படி தெரியாதவர்கள் வேலையை விட்டு போகும் படி சொல்லிவிடுகிறார். இப்படி ஒரு வேலையாள் மத குருவால், கையில் சிறு தொகையுடன் வெளியேற்றப்படுகிறார். வாழ்வை நொந்த அந்த ஆள் கையில் இருந்த தொகையில் ஒரு சிறு தொழிலை ஆரம்பிக்கிறார். பின்பு அதில் பெரும் லாபம் கண்டு பெரிய செல்வந்தர் ஆகிறார். இவரது வைப்பு நிதி வைக்க வங்கிகள் போட்டிப்போட்டு இவரை அணுகுகிறது. அப்பொழுது படிவங்களில் கையெழுத்து போடும்படி வங்கி அதிகாரி கூறியதற்கு கோபப்பட்ட செல்வந்தர் தனக்கு எழுத படிக்க தெரியாது என சொல்ல, அதற்கு வங்கி அதிகாரி நீங்க மட்டும் படித்திருந்தால் இன்னும் மிக பெரிய செல்வந்தர் ஆகி இருக்கலாம் என்றார். அதற்கு சிரித்து கொண்டே பதில் சொன்ன அந்த பணக்காரர், நான் படித்திருந்தால் தேவாலயம் சுத்தம் செய்பவனாகவே இருந்திருப்பேன் என்றாராம். தன்னிடம் இருந்த குறையை ஒரு பொருட்டாக நினையாமல் வாழ்வில் ஜெயிக்க விடா முயற்சியும் அயராத உழைப்புமே இருந்தால் வாழ்வின் வெற்றி கனியை பறித்து விடலாம். இன்றைய நாள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்....

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close