கவலை வேண்டாம் இனி ஆன்லைனில் உயிலை உருவாக்கலாம்.

Last Modified : 21 Apr, 2017 03:39 am

உயிலானது ஒருவரது இறப்புக்கு பிறகு அவரது சொத்துக்களை யாருக்கு வழங்கலாம் என்பதுதானே? இனி ஆன்லைனில் இவற்றை உருவாக்கலாம். முதலில் இச்சேவை வழங்குனர்களின் வலைத்தளத்தில் தன்னுடைய விபரங்களை பதிவு செய்ய வேண்டும். உறுப்பினர்களுக்கு ஒரு பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும்.இதில் தனது சொத்துக்கள், பயனாளிகளின் விபரங்கள் மற்றும் தன்னுடைய பிற தனிப்பட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதைப் பயன்படுத்தி ஒருவரின் உயில் உருவாக்கப்படும். விண்ணப்பமானது கேள்வித்தாள் வடிவிலோ அல்லது போர்டலின் வடிவிலோ இருக்கும் இதில் நமது விவரங்களை நிரப்புவதன்மூலம் அவை வலைத்தளத்தில் பதிவேற்றப்படும். பின்னர், அந்தப் பயனாளர் சேவை மையத்திற்கு உரிய கட்டணத்தை செலுத்த வேண்டும்.சேவை மையத்தின் கட்டண விபரம் ஒவ்வொரு மையத்திற்கும் மாறுபடும்.சேவை மையத்திற்கு உரிய கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஆப்லைன் மூலமாகவோ செலுத்தலாம். ஒரு வழக்கறிஞர்கள் குழு, பயனாளரினால் வழங்கப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி அவரின் உயிலுக்கான முதல் வரைவு அறிக்கையை உருவாக்கும். அதன் பின்னர் அந்த வரைவு அறிக்கை பயனாளரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். பயனாளர் வரைவு அறிக்கையில் மாற்றங்களைப் பரிந்துரைக்கலாம். வரைவு அறிக்கை அங்கீகரிக்கப்பட்ட பின் உயிலின் இறுதி வடிவம் பயனாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.இறுதி வரைவு பயனாளருக்கு கிடைத்த பின்னர், அதை அவர் சாட்சிகள் முன்னிலையில் கையெழுத்திட வேண்டும். நமது நேரம் மிச்சமாகுமோ!!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.