சின்னஞ் சிறு மாற்றமே - வெற்றியின் ரகசியம்

Last Modified : 27 Apr, 2017 04:03 am
எனக்கு எப்போதும் தோல்விதான், கொஞ்சம்கூட ராசி இல்லாதவன், வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை'' என்று பலரும் புலம்பக் கேட்டிருப்போம். ஒரு விஷயத்தை தொடங்கி, அதில் சின்னஞ் சிறு சறுக்கல் வந்தால் கூட சோர்ந்து போய்விடும் பலரையும் பார்த்திருப்போம். இதில் உண்மை என்னவெனில், எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாகச் செய்ய நினைத்து அதில் தோல்வி அடைந்தவர்கள் அதே செயலில் சின்னச் சின்ன மாற்றங்களை மட்டும் செய்துவிட்டால் வெற்றிக்கனியைச் சுலபமாகச் சுவைக்க முடியும். அதற்கு சிறு உதாரணம் பிரபல வெண்ணிற ஆடை தயாரிப்பு நிறுவனம். வேட்டி கட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறதே என்று கவலைப்படாமல்; வேட்டியே கட்டாத, கட்டத் தெரியாத இளைஞர்களைக் கவர 'ஒட்டிக்கோ, கட்டிக்கோ' என்று சிறிது மாற்றிச் சிந்தித்ததன் விளைவால் விற்பனையிலும் புரட்சி செய்திருக்கிறது அந்த நிறுவனம். அதை போல் காலண்டர், டெலிபோன் டைரி, நோட்பேடு, கடிகாரம், கேமரா, டார்ச்லைட், அலாரம், மியூசிக் பிளேயர், கால்குலேட்டர், மெசேஜ், பொழுதைப் போக்கிட விளையாடும் வசதி, இணைய தளங்களைப் பார்க்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் சின்னஞ்சிறு கையடக்கக் கருவியான செல்போனில் இருப்பதால்தான் இன்று அதன் விற்பனை பல கோடிகளைத் தொடுகிறது. விலை உயர்ந்த பட்டு ரகங்களைக்கூட, பேரம் பேசாமல் சொன்ன விலைக்குத்தான் வாங்கிச் செல்ல வேண்டும் என்ற டெக்னிக்கை முதல் முதலில் துணிச்சலாகக் கையாண்டது ஒரு பட்டு நிறுவனம். ""தரமே நிரந்தரம் அதுதான் எங்கள் தாரக மந்திரம்'' என்ற வாசகத்தை வாடிக்கையாளர்களின் மீது தெளித்து, அவர்களை உள்வாங்கிக் கொண்டது அந்த பட்டு விற்பனை நிறுவனம். எனவே சின்னச் சின்ன விஷயங்கள்கூட மிகப்பெரிய மாற்றங்களைத் தந்திருக்கின்றன. செய்யும் செயல்களில் சிறு வித்தியாசங்களையும் சேர்த்து, செய்யப் பழகி விட்டால் வெற்றி உங்களைத் தேடி வந்து உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும். இன்றைய நாள் சிறப்பாக அமையவும், வெற்றிகள் குவியவும் எங்கள் வாழ்த்துக்கள்...!!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close