கட்டமா இருக்குற பவுண்டரிக்கு ஏன் 'ரிங்' என்ற பெயர்....

Last Modified : 04 May, 2017 04:05 am
நான் தொலைக்காட்சியில் குத்துச்சண்டை நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்த போது எங்க வீட்டு வாண்டு ஒரு டவுட் கேட்டான் 'சண்ட நடக்குற இடம் கட்டமா இருக்கும் போது அத ஏன் அப்பா 'ரிங்'னு சொல்லுறோம்"?? இந்த கேள்வி என்னை பழைய நினைவுகளுக்குள் கொண்டு சென்று விட்டது...... குத்து சண்டை என்பது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கண்டுப்பிடிக்கப்பட்டது. அப்போதெல்லாம் கை உறை (gloves), ரெப்ரி (referees) ரிலாக்ஸ் செய்ய கூடிய இடம் (corners) என எதுவும் கிடையாது. இந்த விளையாட்டிற்க்கு என சில விதி முறைகள் உண்டு. இருவர் மட்டுமே மோதி கொள்வர். அவ்வாறு மோதி கொள்வதற்கு முன்பு அந்த இடத்தில் வட்டம்(ரிங்) வரையப்படும். மேலும் போட்டியினை காண வட்டத்தை சுற்றி மக்கள் அமர்ந்திருப்பர். இவ்வாறாக ஆரம்ப கட்ட நாட்களில் வழங்கப்பட்ட இந்த பெயரே நிலையாகி போனது. மேலும் போட்டியினை காண வரும் ரசிகர்கள் போட்டியாளர்களை விழுந்தடித்து கொண்டு பார்ப்பதை தடுக்கவும், வீரர்களின் அடி மக்கள் மேல் விழாத படி தடுக்கவும் 'Square Circle' என அழைக்கபடும் பவுண்டரி அமைக்கப்பட்டது. ஏனெனில் சதுரமான பவுண்டரி அமைப்பது சுலபம். (அதனாலேயே pizza பாக்சும், CD கவரும், சதுர வடிவில் வடிவமைக்கப்படுகிறது.) இந்த பவுண்டரியானது 16 - 20 அடி சுற்றளவு இருக்கும். மேலும், கயிறுகளுக்கான இடைவெளி 2 அடி இருக்க வேண்டும். இந்த பவுண்டரியானது தரையில் இருந்து 3 - 4 அடி உயரத்தில் இருக்க வேண்டும். ஒரு வழியா என் மகன் சந்தேகத்தை கிளீயர் செய்துவிட்டேன்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close