மகிழ்ச்சி ...!!

Last Modified : 08 May, 2017 03:57 am

மகிழ்ச்சி என்று சொன்னதும் கபாலி படத்தில் வரும் ரஜினி உங்கள் நினைவுக்கு வந்தால் தவறில்லை ஆனால் உங்களிடம் மகிழ்ச்சி உள்ளதா என்று சற்று யோசியுங்கள். நான் பணியாற்றிய நிறுவனத்தில் நண்பர் ஒருவர் இருந்தார். எப்பொழுதுமே சோகமாகவும், எதிர்மறையாகவும் பேசக்கூடிய நபர். அதாவது பொசிட்டிவ் எனர்ஜி என்று சொல்லுவார்களே அது சற்று குறைவு. வாழ்வையே வெறுத்து பேசுவார். அவருக்கு மகிழ்ச்சியாக இருக்கவும், நேர்மறை எண்ணங்களுடன் இருக்கவும் நான் எவ்வளவு சொல்லியும் அவர் அதை பொருட்படுத்தவில்லை, ஏனென்றால் மகிழ்ச்சியாக இருப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. பின்பு இது குறித்து சில ஆராய்ச்சிகள் நான் மேற்கொண்டேன். அப்பொழுது சிலர் என்னிடம் சொன்னது, "சோகத்தில் இருக்கும் போது சிரித்து கொண்டு இருந்தால் இந்த சமுதாயம் என்னை பொறுப்பில்லாதவனாய் நினைக்கும், மேலும் என் கஷ்டங்கள் வெளியே தெரியவில்லை என்றால் பலரின் அனுதாபங்கள் எனக்கு கிடைக்காமல் போய் விடும் என்றார்கள்." இப்பொழுது எனக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் ..!! அப்பொழுது சிலர் என்னிடம் கேட்ட கேள்வி யார் உலகில் மகிழ்ச்சியான மனிதன் என்று??? நான் அதற்கு கூறிய பதில் "எவன் ஒருவன் வாழ்வின் கஷ்டங்களையும், துன்பங்களையும் சந்தித்துக் கொண்டு நகைச்சுவை உணர்வுடன் வாழ்கிறானோ அவனே மகிழ்ச்சியான மனிதன்." கஷ்டங்களையும், வேதனைகளையும் மறைத்து இன்முகத்துடன் இருந்தால் உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம். அழகாக இருந்தாலும் மலராத தாமரைக்கு ஏது மதிப்பு. அது போல தான் சிரிப்பு இல்லா முகம்.... உங்களுக்கு இருக்கும் மன இறுக்கம் நோய்களை ஏற்படுத்தி ஆரோக்கியத்தை கெடுத்து வாழ்க்கையை வீணாக்கி விடுகிறது. ஒருவர் வீடு செல்லும்போது அவர்கள் உங்களை மகிழ்ச்சியாக வரவேற்க வேண்டுமானால் நீங்கள் அங்கு மகிழ்வோடு போக வேண்டும். நன்மையும், தீமையும், கலந்தது தான் வாழ்க்கை ஆதலால் வாழ்வை குறையாக நினைத்து மகிழ்ச்சியான முகத்தை இழந்துவிடாதீர்கள். நகைச்சுவை உணர்வு வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் வல்லமையை உங்களுக்கு தந்துவிடுகிறது. மகிழ்ச்சி வெளியில் இருந்து வருவதில்லை மகிழ்ச்சியாக இருப்பதாக எண்ணிக் கொண்டாலே மகிழ்ச்சி உங்களிடம் தோன்றிவிடும். கடவுளிடம் நம்பிக்கை வைப்பது மகிழ்ச்சியை பெற காரணமாகிறது. குடும்பத்தில் உற்சாகத்தைப் பரப்புங்கள் உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உங்கள் குடும்பத்தில் உற்சாகம் இருக்க வேண்டியது அவசியம். மகிழ்ச்சியைப் பற்றியே பேசுங்கள் ஏற்கெனவே உலகத்தில் நிரம்பியுள்ள கவலைகள் போதும், உங்களுடைய கவலைகளையும் அதில் கொட்டாதீர்கள். எப்போதும் கவலையும், தோல்வி மனப்பான்மையுமாக சுற்றிக் கொண்டிருக்காதீர்கள். உங்களை சுற்றியுள்ளவர்களை மகிழ்விப்பது உங்கள் கடமை. நீங்கள் நினைத்தால் வாழ்வின் பிரகாசமான பகுதியை பார்க்க முடியும்.... இன்றைய நாள் மகிழ்ச்சியோடு இருக்க வாழ்த்துக்கள்.....

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.