வீடு கட்டும்போது கடைபிடிக்க வேண்டிய வாஸ்து முறைகள்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
* மனை வாங்கும் போது சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ இருப்பது நல்லது. * கட்டடம் கட்டும்போது கிழக்கிலும், வடக்கிலும் அதிக காலி இடம் விட்டு கட்ட வேண்டும். வடக்குப் பகுதி பள்ளமாகவும் அதிக எடை இல்லாதவாறும் கட்ட வேண்டும். * தெற்குப் பகுதி சற்று மேடாக இருக்கலாம். அதே சமயம் அங்கு அதிக எடையும் ஏற்றலாம். மாடி படிக்கட்டு போன்ற எடை ஏற்றும் கட்டுமானம் தெற்குப் பகுதியில் இருப்பது நல்லது. * குழாய் கிணறு வடக்கு அல்லது கிழக்குப் பகுதியில் வர வேண்டும். சமையல் அறை தென் கிழக்கு மூலை அதாவது அக்னி மூலையில் அமைக்கவேண்டும். * படுக்கை அறை தென் மேற்கில் இருக்க வேண்டும். கழிப்பறை மற்றும் குளியலறைகள் வடமேற்கில் வரவேண்டும். * குழந்தைகளுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும் வடகிழக்குப் பகுதியில் படுக்கையறையை அமைத்துக்கொள்ளலாம். * தென்மேற்கு மூலையில் அதாவது குபேர மூலையில் கழிப்பறை மற்றும் குளியலறைகள் அமைக்கக்கூடாது. அப்படி அமைத்தால் கடன் நிச்சயம் வாங்கும் நிலைமை உருவாகும். * வீட்டைச் சுற்றி சுற்றுச்சுவர் இருப்பது நல்லது. * வீட்டின் நுழை வாசல் கிழக்கிலோ அல்லது வடக்கிலோ இருத்தல் வேண்டும். கோவிலோ அல்லது இடுகாடோ அல்லது மின்மாற்றியோ வீட்டின் மிக அருகாமையில் இல்லாதவாறு இருத்தல் நல்லது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close