அக்குள் கருமையை நீக்க டிப்ஸ்..!!

Last Modified : 01 Jan, 1970 05:30 am

நமது உடம்பில் கருப்பாக இருக்கும் ஒரு இடம் தான் அக்குள். எனவே அக்குள்களில் ஏற்படும் கருமையை போக்கி, பளிச்சிட சூப்பரான சில டிப்ஸ் இதோ! * சர்க்கரையானது, நமது அக்குள்களில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, பளிச்சிட செய்யும் தன்மைக் கொண்டது. எனவே சர்க்கரையை நீரில் கலந்து, அதை அக்குள்களில் ஸ்கரப் செய்து வர வேண்டும். * உருளைக்கிழங்கில் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. எனவே இது நமது சருமத்தில் எந்த ஒரு பக்க விளைவையும் ஏற்படச் செய்யாது என்பதால், உருளைக்கிழங்கை வெட்டி, அதை அக்குளில் 10 நிமிடம் மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். * தினமும் குளிக்கும் முன், எலுமிச்சை சாற்றில் சிறிது நீர் கலந்து, அதனை பஞ்சில் நனைத்து, அக்குள்களில் தேய்த்து, 5 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். பின் குளித்து முடித்ததும் ஏதேனும் மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும். * தயிர், மஞ்சள் தூள், தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அதனை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். * பேக்கிங் சோடாவை நீரில் கலந்து அதை பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் கழுவி, உலர வைக்க வேண்டும். இந்த முறையினாலும் அக்குளிள் இருக்கும் கருமை விரைவில் நீங்கிவிடும். * வெள்ளரிக்காய் நமது சருமத்தின் கருமையை போக்கி, குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே தினமும் வெள்ளரிக்காயை வெட்டி, அக்குளில் தடவி உலர வைக்க வேண்டும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close