மண்டே பிராப்ளம் !!

Last Modified : 01 Jan, 1970 05:30 am

எனக்கு தெரிந்து பல பேர் வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை ஆபீஸ் வர அழுதுகொண்டே வருவர். ஏன் இப்படி என்றால் 2 நாள் சுதந்திரமா இருந்தேன். இப்போ அதே வேலை, அதே ரிப்போர்டிங்,அதே திட்டு, இன்னும் எத்தனையோ அதே அதே ..... எப்போதாவது ஒரு திங்கள் கிழமை இப்படி தோன்றினால் பிரச்சனை இல்லை. ஆனால் எப்போதும் அலறினால், பிரச்சனை திங்கள் கிழமையில் இல்லை. அலறுபவரிடம் தான் உள்ளது. மன அழுத்தம், மன சோர்வு, தன்னம்பிக்கை குறைவு, உடன் வேலை செய்பவர்கள், செய்யும் வேலை, பணியிட சூழல் குறித்த எதிர்மறை எண்ணங்கள், சோம்பேறித்தனம் இவை தான் இதற்கான காரணங்கள். சில பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் இதனை சரிசெய்யலாம். * ஆள் பாதி ஆடை பாதி என்னும் சொல்லுக்கிணங்க நல்ல ஆடையை அணிந்து செல்லுங்கள். இது தன்னம்பிக்கையை தூண்டும். * நகங்களை சுத்தம் செய்து, முடி திருத்தம் செய்ய வேண்டி இருந்தால் திருத்தி, முக சவரம் செய்து பளீர் என்று அழகாக செல்லுங்கள். * மகிழ்ச்சியோடு இருங்கள். உங்கள் இன்முகம் அடுத்தவருக்கும் சந்தோஷத்தை அளிக்கும். * திங்கள் கிழமை காலை ஆபீஸ் சென்றதும் உங்களுக்கு பிடித்தமான வேலையை முதலில் தொடங்குங்கள். * ஆபீஸில் பலவிதமான மனிதர்கள் இருப்பார்கள். சிலரை நமக்கு பிடிக்கும்; சிலருக்கு நம்மை பிடிக்கும். இவற்றை கடந்து மனித உறவுகள் மிகவும் முக்கியம். அனைவரையும் அனுசரித்து அரவணைத்து செல்லுங்கள். * எப்போதும் நேர்மறை(positive) எண்ணங்கள் மிகவும் அவசியம். உங்களை பற்றி, வேலையை பற்றி, உங்கள் நிறுவனத்தை பற்றி உடன் பணிபுரிபவர்களை பற்றி நேர்மறை எண்ணங்கள் வளர்த்து கொள்ளுங்கள். குற்றமும், குறையும் கண்டுபிடிப்பதையே ஒரு வேலையாக செய்யாதீர்கள். * திட்டமிட்டு வேலையை செய்து முடிக்க பாருங்கள். திட்டமிடுதல் வாழ்வில் பல்வேறு மாற்றங்களை தரும். * திங்கள் கிழமை தாமதமாக எழுந்து அடித்துப்பிடித்து அலுவலகம் போகாமல், கொஞ்சம் முன்பே எழுந்து உடற்பயிற்சி, தியானம் செய்து விட்டு சீக்கிரமே வேலைக்கு செல்லுங்கள். இந்த பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் நமது எதிர் காலத்தை சிறப்பாக மாற்ற முடியும். இந்த திங்கள் கிழமையை ஜமாய்ங்க.... ஆல் தி பெஸ்ட் !

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.