காதலர்களே இதை கொஞ்சம் படிங்க.....

Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஒரு காலத்தில் காதல் என்பது தேசிய குற்றமாக கருதப்பட்டது ஆனால் இன்று அது சர்வ சாதாரணமான ஒன்று. பெற்றோர்களே தன் குழந்தைகளின் மனம் அறிந்து அவர்கள் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிடுகின்றனர். அப்படிப்பட்ட காதல், கல்யாணத்தில் முடிந்தாலும், அந்த திருமண வாழ்வு வெகு சில நாட்களில் கசந்து விடுகிறது. அதற்கு காரணம் யார் ? பெற்றோர்களா ? கிடையாது இதற்கு முழு காரணம் காதலர்களே. நீங்கள் செய்யும் சில தவறுகளே இதற்கு காரணம். காதல் ஜோடிகள் காதலிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன அவை. * ஒருவரை நீங்கள் காதலிக்கத் தொடங்கினால், அவரை காதலிப்பதற்கு என்ன காரணம் என்பதை உங்களுக்குள்ளே ஆராயுங்கள். அழகை பார்த்தோ, நடை- உடை -பாவனையை பார்த்தோ, இனிமையான பேச்சை ரசித்தோ, அவரிடம் தோன்றும் பகட்டை விரும்பியோ காதலித்துவிடக்கூடாது. அவை காதலிக்கும்போது இனிமையை தரலாம். திருமண பந்தத்தில் இணையும்போது வாழ்க்கையை சுவாரசியமற்றதாக ஆக்கிவிடும். * ஆரம்பத்திலேயே காதலிப்பவரை பற்றிய முழு விவரத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். குடும்பத்தை பற்றியோ, வசிக்கும் இடத்தை பற்றியோ, வேலை பார்க்கும் இடத்தை பற்றியோ சொல்ல தயங்குபவர்களிடமும், கேட்கும் கேள்விக்கு சம்பந்தமில்லாமல் பதில் சொல்பவர்களிடமும் விழிப்புடன் இருக்க வேண்டும். தன்னை பற்றிய தகவல்களை மறைப்பவர்கள், தவறான தகவல்களை கூறுபவர்கள் ஏமாற்று பேர் வழியாக இருப்பார்கள். * குறைசொல்வது- திட்டுவது- செல்ல சண்டை என்ற சாக்கில் கைநீட்டி அடிப்பது போன்றவைகளில் எல்லாம் அவர் ஈடுபட்டால் உஷாராகி விடுங்கள். இவைகளெல்லாம் உங்கள் மீதான அக்கறையில் உரிமை எடுத்துக்கொண்டு செய்யும் காரியமாக நினைத்துவிடாதீர்கள். * வசீகர வார்த்தைகளுக்கு மயங்கிவிடக்கூடாது. அதுபோல் அந்தரங்கமாக பேச தொடங்கினால் விழிப்புடன் இருக்க வேண்டும். அப்படிப் பட்டவர்களின் காதல் நோக்கம் சரியாக இருக்காது. * இருவரும் நன்கு புரிந்துகொண்டு, பழகிய பின்பு வருவதே உண்மையான காதல். உண்மையாக காதலிப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை கொட்டமாட்டார்கள். * நாம்தாம் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டோமே? தொட்டு பேசக்கூடாதா?’ என்று எல்லை மீற அனுமதித்துவிடக்கூடாது. எல்லை மீறும் காதல் உண்மையான காதலாக இருக்க முடியாது. * குடும்பத்தை பகைத்து கொண்டு காதல் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. ஆதலால் பெற்றோர் சம்மதத்துடன் காதலனையோ,காதலியையோ கரம் பிடித்து திருமண பந்தத்தில் இணைத்திடுங்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close