பொறாமை வேண்டாமே ...

Last Modified : 07 Jun, 2017 11:56 am
பொறாமை என்பது ஒருவித மனநோய். தனக்கு கிடைக்காத ஒன்று பிறருக்கு கிடைக்கும் போதும், அல்லது தனக்கு கிடைத்ததை போலவே வேறொருவருக்கு கிடைக்கும் போதும் ஏற்படுகிற ஒரு வித உணர்வே பொறாமை. இதில் ஆண்,பெண் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. ஓரே துறையில் இருக்கும் இருவருக்கிடையே பொறாமை தீ மேலோங்கி எரிகிறது. உதாரணமாக : ஒரு அலுவலகத்தில், ஒரே துறையில் ஆண், பெண் என இரு பாலர்கள் பணி புரிகின்றனர். கம்பெனி முதலாளி பெண்ணின் திறமைகளை கண்டு பாராட்டுகிறார் என்றால் போதும் சக தொழிலாளர்களின் முகம் சிறுத்து விடும். இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் ஒவ்வொரு அசைவிலும் குற்றம் சுமத்த தயாராகிவிடுகிறது அந்த கூட்டம். பாவம், அப்பெண்ணின் மன நிலையையோ அல்லது குடும்ப சூழலையோ தெரிந்து இருக்காதா இந்த குள்ள நரி கூட்டம் அவளை வேலையில் இருந்து தூக்க முடிவு செய்து விடுகிறது. இது எதுவும் அறியாத கம்பெனி முதலாளி 'வெளுத்ததெல்லாம் பால்' என்னும் பழமொழிக்கு ஏற்ப இந்த நரி கூட்டத்தை நம்பி விடுகிறார். இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம் எது 'பொறாமை'. உங்களோடு கூட இருப்பவர்கள் வாழ்வில் சந்தோசங்களை அனுபவிக்கும் போது அவர்கள் மீது பொறாமை கொள்வதை விட்டு விட்டு மகிழ்ச்சி கொள்ளுங்கள். மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள். பொறாமை கொள்வதால் உங்கள் நிம்மதியையும் மன அமைதியையும் நீங்களே கெடுத்துக் கொள்கிறீர்கள். அடுத்தவரை பற்றி அவதூறு பேசி, பாவத்தைத் தேடாமல் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குங்கள். அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ..

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close