1.4 கோடிக்கு விலை போன ஐன்ஸ்டீன் கடிதங்கள்!

Last Modified : 21 Jun, 2017 12:45 pm

புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதங்கள் 1.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. 1951 முதல் 1954-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தன் உடன் பணியாற்றிய டேவிட் என்பவருக்கு அவர் எழுதிய 8 கடிதங்கள் ஏலத்தில் விடப்பட்டன. வின்னர்ஸ் ஏல நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது. இந்த கடிதத்தில் கடவுள், இஸ்ரேல் மற்றும் இயற்பியல் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் எழுதி உள்ளார். டைப் ரைட்டரில் டைப் செய்யப்பட்ட இந்த கடிதங்களில் ஐன்ஸ்டீன் தனது கைப்பட கையெழுத்திட்டுள்ளார். 30 லட்ச ரூபாய் வரை விலைபோகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த கடிதங்கள் 1,35,69,150 ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close