உங்களுக்கு தன்னம்பிக்கை ஏற்பட இதோ எளிய ஏழு வழிகள்…!

Last Modified : 23 Jun, 2017 04:45 am
தொடர் தோல்விகளால் துவண்டு இருந்த என் நண்பரிடம் தன்னம்பிக்கையை இழக்காதே, தைரியமாக இரு என்று கூறினேன். அதற்கு அவர், அது எப்படி வரும், எவ்வாறு வரும் என்று சந்தேகமாக திருப்பி கேட்டார். இத்தகைய சந்தேகம் உள்ள மக்களுக்கு, தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்பட இதோ எளிய ஏழு வழிகள்... 1. உங்களை நீங்களே எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக நேசிக்க ஆரம்பிக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு உங்களுக்குள் தன்னம்பிக்கை வேரூன்றும். மேலும், உடலுக்கும் உள்ளத்திற்கும் சற்று ஓய்வு கொடுத்து உங்களை நேசிக்கத்தொடங்கினால் மனதில் உற்சாகம் தோன்றி அமைதியும் தன்னம்பிக்கையும் ஏற்படும். 2. உங்கள் மேனியழகு, உங்கள் உள்ளத்தில் தன்னம்பிக்கையை முழுமையாக மலரச் செய்யும். உடல் தூய்மை, மன தூய்மை இரண்டும் இதற்கு அவசியம் . 3. உங்களிடம் உள்ள சின்னஞ்சிறு குறைகளை பிறர்சுட்டிக்காட்டும் போது கோப படாமல் அதனை திருத்தி கொள்ளுங்கள்.உங்கள்தோல்விகளை ஒப்புக்கொள்ள வெட்கப்படாதீர்கள். 4. உங்கள் சொந்தவாழ்க்கை, தொழில், வியாபாரம், பணத் தேவை போன்ற அனைத்தையும் பற்றி முதலிலே ஒரு செயல்திட்டம் வகுத்துவிடுங்கள். அதற்கு தக்கபடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். இதன் மூலம் எதிர்காலம் வளமாக அமையும். வளமான வாழ்க்கை தன்னம்பிக்கையை வளர்க்கும். 5. ரிஸ்க்கான விஷயங்களை தைரியமாக எதிர்கொண்டு, வெற்றி கிடைக்கும் போது உங்களிடம் தன்னம்பிக்கை பிறக்கும். 6. உங்களை நீங்கள் நம்புங்கள்…! உங்கள் மீது நீங்கள் ஒருபோதும் அவநம்பிக்கை கொள்ளாமல் எப்போதும் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் திறமையை நீங்களே நம்பாவிட்டால் வேறு யார் நம்புவார்கள். 7. அளவுக்கு அதிகமான பிரச்சனைகள் இருந்தாலும், முக இறுக்கத்துடன் இல்லாமல், சிரித்த முகத்துடன் இருக்கும் போது தன்னம்பிக்கை உங்களிடம் அதிக பலம் பெறும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close