வாழ்வில் நாம் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகள்

Last Modified : 25 Jun, 2017 04:47 pm
நாம் அனைவரும் தினமும் கடைபிடிக்க வேண்டிய அருங்குணங்கள் பல உள்ளன. ஒழுக்கம், நாணயம், நேர்மை, மற்றவர்களுக்கு நன்மை செய்தல் என அவற்றை அடுக்கி கொண்டே போகலாம். அவற்றில் சிலவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் நமக்கு சமுதாயத்தில் மதிப்பு கூடும். அதற்கான சில குறிப்புகள்.... * நீங்கள் நண்பர் அல்லது உறவினர்களுடைய காரை பயன்படுத்தி விட்டு திரும்ப விடும் போது அதில் பெட்ரோல் நிரப்பி வையுங்கள். அப்பொழுது தான் நீங்கள் மறுமுறை உதவிக்கு கேட்கும் போது உங்களுக்கு கிடைக்கும். * பொது இடத்தில் மொபைல் போனில் வீடியோ அல்லது கேம் விளையாடும் போது அதன் ஒலியை குறைத்து வையுங்கள். இல்லையேல், ஹெட் போன் உபயோகிப்பது நல்லது. * ஒருவர் உங்களுக்கு காபி அல்லது உணவு வாங்கி தந்தார் என்றால் அதனை ஒரு வாரத்திற்குள் திருப்பி வாங்கி தந்து விடுங்கள். * சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒருவரது வீட்டில் இரவு தங்க நேர்ந்தால், காலை எழுந்ததும் நீங்கள் பயன்படுத்திய போர்வையை மடித்து வைக்க பாருங்கள். * நண்பரிடம் கடனாக சிறு தொகையை பெற்றிருப்பீர்கள் ஆனால் அதனை கூடுமானவரை சீக்கிரம் திருப்பி தந்து விடுங்கள். சிறு தொகை தானே அவருக்கு பயன்படாது என்று நீங்களாகவே அனுமானிக்காதீர்கள். * உங்கள் வீட்டு தேவைக்காக நண்பர்களை உதவிக்கு அழைத்தீர்கள் என்றால், அன்றைய உணவை அவர்களுக்கு நீங்களே பரிமாறி விடுங்கள். * உங்கள் மொபைல் போனில் மிஸ்டு கால் இருந்தால், சம்மந்தப் பட்ட நபருக்கு உடனே கால் செய்து பேசிடுங்கள். முடியாத சூழ்நிலையில் குறுந் செய்தி அனுப்பி விடுங்கள். * இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் கூடும் இடத்தில் ஒருவரது காதில் மட்டும் ரகசியம் பேசாதீர்கள். * அடுத்தவரின் மொபைல் போனையோ அல்லது கம்ப்யூட்டர் திரையையோ அவரின் அனுமதியின்றி பார்க்காதீர்கள். * ஒருவருடன் பேசும் போது புகை பிடித்து கொண்டு பேசாதீர்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close