உலகின் முதல் ஏடிஎம்-ன் வயது என்ன தெரியுமா?

Last Modified : 01 Jan, 1970 05:30 am
வங்கிக்கு சென்று, செல்லான் நிரப்பி, கால் கடுக்க லைனில் நின்று பணம் எடுத்த காலம் மலையேறிப் போய்விட்டது. ஏடிஎம் மெஷினின் வருகைக்கு பின்னர் வங்கிக்கு பணம் எடுக்க செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. இன்று திரும்பும் பக்கம் எல்லாம் ஏடிஎம்-களை பார்க்க முடியும். வற்றாத நதியாய் பணத்தை அளிக்கும் இந்த ஏடிஎம்-களின் வயது என்ன தெரியுமா?. உலகின் முதல் ஏடிஎம்-க்கு நேற்றோடு 50 வயதாகிறது. 50 வயதிலும் இன்னும் அந்த ஏடிஎம் தொய்வில்லாமல் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஸ்டெஃபர்ட் ஃபாரன் என்பவர்தான் ஏடிஎம் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். 1967-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27-ஆம் தேதி வடக்கு லண்டனில் உள்ள என்ஃபீல்டு என்ற இடத்தில், பார்க்லேஸ் வங்கி முதல் ஏடிஎம்-ஐ நிறுவியது. இந்த ஏடிஎம்-ற்கு 50 வயது நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், நேற்று இந்த ஏடிஎம்-ல் பணம் எடுக்க வந்தவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. தற்போது உலகம் முழுக்க 30 லட்சத்திற்கும் மேற்பட்ட இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close