முயன்றால் நிச்சயம் முடியும் ..!!

Last Modified : 10 Jul, 2017 04:31 am
நாம் எதை செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் உண்டு. ஆனால் நாம் எதிர்பார்க்கும் வெற்றி நம் கையில் கிட்டுகிறதா என்பது கேள்விக்குறியே ? ஏன் நம்மால் நாம் ஆசைப்பட்ட வெற்றி கனியை பறிக்க முடியவில்லை. ஏனென்றால் நாம் ஆசைப்பட்டு செய்யும் பணியில் சிறு தொய்வு காரணமாக தோல்விகள், பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே அதனை கண்டு பயந்து, மனம் தளர்ந்து வேலையை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றோம். அவ்வாறாக இல்லாமல் ஏற்பட்ட தோல்விக்கான காரணத்தை நன்கு ஆராய்ந்து, புதிய ஒரு கோணத்தில் அந்த பிரச்சனைக்கான தீர்வை பற்றி மட்டும் யோசித்து விடா முயற்சியுடன் தொடர்ந்து செய்வோமானால் வெற்றி நமக்கே . நாம் யார், நம்முடைய குறிக்கோள் என்ன, எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். மற்றவர்களின் பார்வையில் நம் செயல் தோல்வியாக தெரிந்தால் அதைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. உங்களுடன் படித்த ஒருவர் வெற்றி அடைகிறார் என்றால் உங்களாலும் வெற்றி அடைய முடியும், உங்களுடன் பணிபுரியும் ஒருவர் முன்னேறுகிறார் என்றால் உங்களாலும் முடியும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழில் துறையில் ஒருவர் பலகோடி ருபாய் சம்பாதிக்கிறார் என்றால் உங்களாலும் நிச்சயம் சம்பாதிக்க முடியும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான் அவர் தொழில் செய்யும் முறையைக் கற்க வேண்டும், அவரை விட சிறப்பாக செய்யும் முறையை ஆராய்ந்து விடா முயற்சியுடன் உழைத்தால் வெற்றி உங்களுக்கே. உதாரணமாக : ஒருவர் மக்கள் நடமாட்டம் குறைந்த மலைப் பகுதியில் தேநீர் விற்றுக் கொண்டிருந்தார் ,அவருடைய வியாபாரம் சரியாக நடைபெறாமல் நஷ்டத்தில் சென்று கொண்டிருந்தது, விடா முயற்சி செய்கிறேன் என்று நினைத்த நண்பர் அடுத்த நாள் முதல் அந்த மலையின் உச்சியில் ஐஸ் வியாபாரம் செய்தார் அதிலும் நஷ்டம் ஏற்பட்டது, பிறகு அங்கே மீன் வியாபாரம் செய்தார் அதிலும் நஷ்டமே ஏற்பட்டது. நண்பர்களே அந்த நண்பர் ஏற்பட்ட தோல்வியில் இருந்து சரியாக பாடம் கற்கவில்லை அவர் செய்ய வேண்டியது என்னவென்றால் முதலில் மக்கள் நடமாட்டம் குறைந்த மலைப் பகுதியில் இருந்து வெளியேறி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு வந்து தன்னுடைய தொழிலை துவங்கி இருக்கவேண்டும். இந்த நண்பரைப் போலவே வாழ்க்கையில் நம்மில் சிலர் ஏற்பட்ட தோல்வியில் சரியாக பாடம் கற்காமல் விடா முயற்சி செய்கிறேன் என்னால் வெற்றி பெற இயலவில்லை என்று விரக்தி அடைகிறோம். தெளிவான இலக்குடன், கடின உழைப்பு, தளராத தன்னம்பிக்கை விடா முயற்சி, இவை அனைத்தும் இருந்தால் வெற்றி உங்களுக்கே... இந்த நாள் வெற்றி மிகுந்த நாளாக அமைய Newstm -ன் வாழ்த்துக்கள்...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close