இந்தியாவின் முதல் விவிஐபி மரம்

Last Modified : 13 Jul, 2017 01:52 pm
மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் உள்ள மலைக்குன்று ஒன்றில் வளர்ந்து வரும் அரச மரம், இந்தியாவின் முதல் விவிஐபி மரம் என அழைக்கப்படுகிறது. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிய மரக்கன்றாக இருந்ததில் இருந்து தற்போது பெரிய மரமாக வளர்ந்துள்ளது வரை அனைத்து நிலைகளிலும் இதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. வாரம் ஒருமுறை தாவரவியல் வல்லுநர்கள் மற்றும் வேளாண் அதிகாரிகள் வந்து இந்த மரத்தின் ஆரோக்கியத்தை சோதனை செய்கின்றனர். தினமும் தவறாமல் காலை மாலை வேளைகளில் தண்ணீர் ஊற்றப்படுகிறது. இந்த மரத்திற்கு சேதம் ஏற்படாமல் தவிர்க்க நான்கு புறமும் வேலி அமைக்கப்பட்டு காவலுக்கு 4 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒரு மரத்திற்காக மட்டும் ஆண்டு தோறும் 12 லட்ச ரூபாயை மத்திய பிரதேச அரசு செலவழித்து வருகிறது. இந்த ஒற்றை மரத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம் இது தான் : புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தின் ஒரு கிளை 3-ஆம் நூற்றாண்டில் இலங்கையில் உள்ள அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நடப்பட்டது. பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் கடந்த 2012-ஆம் ஆண்டு இந்தியா வந்த அப்போதைய இலங்கை அதிபர் மஹிந்திர ராஜபக்சே, போதி மரத்தின் கன்று ஒன்றை தன்னுடன் எடுத்து வந்தார். அந்த கன்று தான் சாஞ்சியில் இன்று வளர்ந்து நிற்கும் விவிஐபி மரமாகும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close