பிறர் அன்பை மதியுங்கள்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
இன்றைய அவசர உலகில் உறவுகள் பெரும்பாலும் ஏனோதானோ என்ற மேலோட்ட நிலையிலேயே வாழ்கின்றனர். எல்லாமே வியாபார கண்ணோட்டத்துடனே பார்க்கப்படுகிறது. உறவுகள் என்பது ரத்த சொந்தங்கள் மட்டும் அல்ல.. மாறாக அது நட்பு, தெரிந்தவர்கள், பழகியவர்கள் என்றும் இருக்கலாம். குடும்ப விழாக்களில் மட்டுமே சொந்தங்களை சந்திப்பது என்ற அவல நிலையை இன்றைய நாகரீக வாழ்வு தந்துள்ளது. சரி சொந்தங்களை தான் ஆடிக்கு, அமாவாசைக்கு என்று சந்திக்கிறோம் என்றால்... தினமும் நம் பள்ளியில், கல்லூரியில், அல்லது வேலை செய்யும் இடத்தில் இருக்கும் நண்பர்களை மதிக்கின்றோமா என்பது ஆச்சரியம் கலந்த கேள்வி குறியே..!! நம்மிடம் ஒருவர், எந்தவித பிரதிபலனும் இன்றி அன்பு காட்டுகிறார் என்றால் அதனை புரிந்து கொண்டு அவரிடம் அன்பை திருப்பி தரலாம். ஏனேனில் அவர் உங்களிடம் எதிர்பார்ப்பது நகையோ, பணமோ, சொத்தோ அல்ல! மாறாக அன்பை மட்டுமே.. அன்பு, பாசம்,நட்பு,காதல் இது அனைத்தும் விலை மதிப்பு இல்லாதது.. அதனை உதாசீனப்படுத்துவதால் அல்லது கொச்சைப் படுத்துவதால் என்ன நிகழ்ந்து விடப்போகிறது.. மரணத்தை விட கொடியது, நம் அன்பை பற்றி ஒரு நிமிடம் கூட நினைக்காதவர்களை!! நொடிக்கு நொடி நினைத்து கொண்டு இருப்பது தான். அன்பு என்பது சொல்லி புரிய வைப்பது அல்ல மாறாக அது உணர கூடிய ஒன்று... நினைத்த பொருள் நினைத்த நிமிடத்தில் கிடைத்து விடும் இந்த மாய உலகில் உண்மை அன்பு கிடைப்பது அரிது... எல்லோருக்கும், எல்லோரையும் பிடித்து விடுவது இல்லை..உங்களிடம் ஒருவர் தனது ரகசியங்களை பகீர்கிறார் என்றால், அவர் தன்னை விட உங்களை அதிகம் நம்புகிறார் என்று அர்த்தம். அத்தகைய அன்பு வைத்தவரிடம் விளையாட்டாக நிராகரிக்கும் ஒரு சொல் அவரின் இதயத்தின் வேரை அறுத்து விடும். உண்மையான பாசத்திற்கு கண்ணீர் துளிகளை பரிசளிக்காமல், அன்பை வாழ்வோம்..!! அன்பை பகிர்ந்து வாழ்வை ரசிப்போம் ..!!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close