ஊபர் நிறுவனத்தின் அடுத்த சி.இ.ஓ ஒரு இந்தியரா?

  jvp   | Last Modified : 15 Jul, 2017 03:25 pm

பிரபல ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான 'ஊபர்' தலைமை நிர்வாக அதிகாரி, கடந்தமாதம் தன்னுடைய பதவியில் இருந்து விலகிய நிலையில்,புதிய அதிகாரியை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் சி.இ.ஓ வாக இருந்த டிராவிஸ் காலாநிக் நிர்வாகத்தை விட்டு வெளியேறியதால், மதிப்பும் பொறுப்பும் நிறைந்த அந்தப் பணியிடத்தில் யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அவர் வெளியேறிய நாள் முதல் இருந்தே நிலவி வருகிறது. இப்பதவிக்கு பல முன்னணி நிறுவனத்தின் தலைவர்கள் போட்டிப்போட்டு வருகின்றனர். கூகிள் மற்றும் சாஃப்ட்பாங்க் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரியும் இந்தியருமான நிகேஷ் அரோரா, இந்த போட்டியில் முன்னிலை வகிக்கிறார். ஊபர் நிர்வாகமும் இவருக்கு அதிகளவிலான ஆதரவை அளித்து வருகிறதாம். ஆனாலும் அவர் சி.இ.ஓ ஆவதென்பதும் சாதாரண விஷயமில்லையாம். இவர்களுடன் மேலும் சில பிரபலர்களும் போட்டி போடுகிறார்கள். அதன் விபரம்: * சுசன் வோசிச்க் (யூடியூப் நிறுவனத்தின் தலைவர்) * ஆடம் பெயின் (டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ) * டேவிட் கஷ் யாஹூ (வெர்ஜின் அமெரிக்கா நிறுவன முன்னாள் சி.இ.ஓ.) * மரிசா மேயர் (யாஹூ நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ) * தாமஸ் ஸ்டேக்ஸ் (டிஸ்னி நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ)

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close