நெல்சன் மண்டேலா பிறந்த தினம் - அவரைப் பற்றிய சிறு தொகுப்பு !!

Last Modified : 18 Jul, 2017 06:26 am
* தென்னாப்பிரிக்காவின் நிறவெறி அரசுக்கு எதிராக போராடி 25ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த போராட்ட வீரர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினம் இன்று. * இவரின் பிறந்த தினமான ஜூலை 18ம் தேதியை ஐ.நா.சபை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக 2009ம் ஆண்டு அறிவித்தது. * இவர் 1918ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி தென்னாப்பிரிக்காவின் குலு என்ற கிராமத்தில் பிறந்தார். * சட்டம் படித்த இவர், ஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் இணைந்து அதன் தலைவரானார். * இன வாதக் கொள்கைகளுக்கு எதிராக அறப்போராட்டங்களை நடத்திய இவர் மீது மனித உரிமை மீறல்கள் குற்றம் சாட்டப்பட்டு, 1962ம் ஆண்டு கைது செய்தனர். பின்னர் 1964ல் இவருக்கு ஆயுள் தண்டனை(46 வயது) விதிக்கப்பட்டது. * மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம் என்ற அரசின் நிபந்தனையை நிராகரித்த இவரை, அந்நாட்டின் புதிய அரசு 1990ம் ஆண்டு(71 வயது) விடுதலை செய்தது. * தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான இவருக்கு, நேரு சமாதான விருது, பாரத ரத்னா விருது, அமைதிக்கான நோபல் பரிசு, மகாத்மா காந்தி சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. * உலகம் முழுவதும் 250க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ள நெல்சன் மண்டேலா, 2013ம் ஆண்டு தனது 95ம் வயதில் மறைந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close