பால கங்காதர திலகர்

Last Modified : 23 Jul, 2017 07:12 am

* விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் 1856ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார். * தாதாபாய் நவ்ரோஜியின் நூலும் அதை அடிப்படையாகக் கொண்டு விஷ்ணு சாஸ்திரி ஆற்றிய உரைகளும் ஆங்கில அரசுக்கு எதிராக இவரைச் சிந்திக்கச் செய்தன. சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவேன் என்று முழங்கினார். * ஸ்ரீஅரவிந்தர் உட்பட ஏராளமானோர் இவரது தலைமையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தேசிய காங்கிரஸில் 1889-ல் இணைந்தார். பல விடுதலை போராட்டங்களை முன்னின்று நடத்திய இவர் 1908லிருந்து 1914 வரை சிறையில் இருந்தார். * முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய இவர் தன்னுடைய 64வது வயதில் (1920) மறைந்தார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close