மண்டே மோட்டிவேஷன் ..!!

Last Modified : 24 Jul, 2017 08:06 am

ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர். அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது. இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கம் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது,பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர்.சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும்,நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர். சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது. சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது. கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது.."உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்,நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது ,உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது" என்றிருந்தது. உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது,உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது,நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும். ஆம் நண்பர்களே, என்னால் முடியவில்லை, எனக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கிறது. கடவுள் இருக்கிறாரா இல்லையா ? என்பது போன்ற தன்னம்பிக்கை இல்லா பேச்சை விரட்டி விட்டு வெற்றிக்கான வழி வகுப்போம். படுத்துக் கிடப்பவனுக்குப் பகல் கூட இரவு தான் - ஆனால் எழுந்து நடப்பவனுக்குத் திரும்பும் திசையெல்லாம் உதயம். உங்களுக்கு என்னென்ன இல்லை எனக் கவலைப்படுவதை விட உங்களுக்கு ஏதாவது சிறப்புத்தன்மை இருக்கும் அதை நினைத்து மகிழ்ச்சியடையுங்கள்! உங்களிடம் இருக்கும் நிறைகளைப் பற்றி எண்ணுவதால் உத்வேகம் பிறக்கிறது. முடியாது என்று இந்த உலகில் எதுவுமே இல்லை முயன்றால் மலையும் மகுடு தான். சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செயல்படுகிறவனுக்கு எல்லா கதவுகளும் திறந்தே இருக்கும். வெற்றி நிச்சயம்... இந்த நாள் சிறப்பாக அமைய newstm-ன் வாழ்த்துக்கள்...!!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close