மைக்ரோசாஃப்டில் இனி 'பெயின்ட்' செயலி கிடையாது

  jvp   | Last Modified : 25 Jul, 2017 06:54 pm

கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக மைக்ரோசாஃப்டில் உபயோகப்படுத்தப்பட்டு வரும் 'பெயின்ட்' செயலி இனிவரும் வின்டோஸ்களிலிருந்து முற்றிலும் நீக்கப்பட இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்குப் பதிலாக 'பெயின்ட் 3டி' என்கிற புது செயலி வரவுள்ளது. இதன் மூலம் சாதாரணப் புகைப்படங்களை 3டி யாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் 2டி யிலிருந்து 3டிக்கு மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கின்றனர். ஆனாலும் விண்டோஸிலிருந்து 'பெயின்ட்' எப்போது நீக்கப்படும் என்ற அதிகாரப்பூர்வத் தகவல் இன்னும் வெளியாகவில்லை. 'வின்டோஸ் 10 ஆடம்ன் கிரியேட்டர்ஸ்' விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில் அதனோடு சேர்த்து இந்த 'பெயின்ட் 3டி'யும் பயனாளர்களின் பயன்பாட்டுக்கு வரலாம் எனவும் பேசப்படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close