ஆடி வெள்ளி சிறப்புகள்

Last Modified : 28 Jul, 2017 02:29 pm
ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதமாகும். அதுவும் இந்த மாதத்தில் வரும் வெள்ளி கிழமைக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. ஆம், இந்த வெள்ளி கிழமையை சுக்கிர வார விரதம் என்று கூறுவார்கள். இந்த மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். அதனால், அம்மனின் சக்தி பல மடங்காக அதிகரித்திருக்கும். இந்த வேளையில் அம்மனை வழிபடும் போது சகல பாக்கியங்களும் கிடைக்கும். குறிப்பாக ஆடி வெள்ளி கிழமைகளில் அம்மனையும், மகா லக்ஷ்மியையும் வழி படும் போது செல்வ செழிப்பு, மங்கலய பலம், குடும்பத்தில் நன்மை கிடைக்கின்றது. அதில் விரதம் கடைபிடிப்பது என்பது கூடுதல் சிறப்பு. ஆடி வெள்ளியில் முப்பெரும் தேவியருக்கு முதல் 3 வாரங்கள் பூ அலங்காரமும், 4 வது வாரம் காய் அலங்காரமும், 5 வது வாரம் பழ அலங்காரமும் செய்து வழிபடுவார்கள். விரதமும், வழிபாடு முறைகளும் : கன்னி பெண்கள் : ஆடி வெள்ளியன்று துர்கையம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வந்தால் மணமாகாத கன்னி பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். திருமணம் ஆன பெண்கள்: ஆடி வெள்ளியன்று மஹாலக்ஷ்மியை வழிபட்டால் நிறைந்த செல்வம் வீடு தேடி வரும். மேலும், விரதம் இருந்து தங்கள் குல வழக்கப்படி வழிபடலாம். இதனால், கணவனின் ஆயுள் அதிகரிக்கும்.. சுமங்கலி பலம் கூடும். குலம் தழைக்க: ஆடி வெள்ளி மாலை நேரத்தில் ஆலயங்களில் குத்து விளக்குப் பூஜை நடைபெறும். அதில் 108 அல்லது 1008 விளக்குகள் வைத்து பூஜை செய்வார்கள். அந்த வேளையில் சுமங்கலி பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றோடு ரவிக்கை துணியும் வைத்து தருவது நலம் தரும். புதுமண தம்பதியரை பிரிக்க என்ன காரணம் ? ஆடி மாதம் பிறப்பதற்கு முதல் நாளே புது மாப்பிள்ளை, பெண்ணையும் பிரித்து வைப்பார்கள். ஏனெனில் அம்மாதம் முழுவதும் சில்லென்று காற்று வீசுவதால், அம்மாதத்தில் சேரும் தம்பதியர்களுக்கு சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். இதனால் கோடை வெயிலின் தாக்கத்திற்கு குழந்தை ஆளாகும். அதனால்தான் அம்மாதம் முழுவதும் மணமான புதுப் பெண், தன் தாய் வீட்டிலேயே தங்கிவிடுகிறாள். இவ்வளவு சிறப்பு மிக்க இந்த ஆடி மாதத்தில் நல்ல காரியங்கள் ஏன் செய்ய கூடாது ? இந்த மாதத்தில் விரதங்கள், வழிபாடுகள், கோயில் திருவிழாக்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். இறைவனை துதிப்பதற்கும், அவன் சிந்தனையாகவே ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்வதற்கும் இடையூறாக மற்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்துவிட கூடாது என்பதற்காகவே மற்ற சுப விசேஷங்கள் இந்த மாதத்தில் தவிர்க்கப்படுகிறது. ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி வரலக்ஷ்மி விரதம் கடைபிடிக்கப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close