மண்டே மோட்டிவேஷன் ..!!

Last Modified : 31 Jul, 2017 11:47 am
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். இந்த உலகினில் கடவுளால் செய்ய முடியாத காரியம் என்ற ஒன்று இருக்க முடியாது, அப்படிப்பட்ட கடவுளாலேயே செய்ய இயலாத ஒரு காரியம் இருந்தாலும், அதனை ஒருவர் விடா முயற்சியுடன் செய்தால் அவருடைய உடல் உழைப்பிற்கு ஏற்ற பலன் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்கிறார் வள்ளுவர். "இந்த வேலை மாதிரி கஷ்டமான வேலை உலகத்திலேயே கிடையாது!" "என் அளவுக்கு அடிபட்டவன் யாரும் இருக்க மாட்டான்." "என் நிலைமை என் எதிரிக்குக் கூட வரக் கூடாது." இப்படிப்பட்ட ஏகோபித்த வசனங்களை யாரோ ஒருவர் தினமும் பேச கேட்டிருப்போம். இப்படி சொல்பவர்கள் தன் வாழ்வில் முன்னேற எந்த வித முயற்சியும் எடுப்பதில்லை... முயன்றால் தானே வாழ்வில் முன்னேற முடியும். இயற்கையை ரசிக்கும் நாம், அது மேற்கொள்ளும் முயற்சியை என்றேனும் பார்த்து இருக்கிறோமா ? ஆம்! அழகான நீரூற்றுக்கும், பாறைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தின் இறுதியில், நீரூற்று வெற்றிபெற்று நீரோடையாகிறது. இது நடப்பது நீரோடையின் பலத்தினாலா ? இல்லை நிச்சயம் இல்லை, அதன் தொடர் முயற்சியினால்... விதைக்குள்ளையே இருந்துவிட்டால் மரங்கள் ஏது... வாழ்வில் வெற்றி பெற்றவர்களை வாயை பிளந்து பார்க்கும் நாம், அதற்காக அவர்கள் மேற்கொண்ட முயற்சியை பார்க்க மறந்து விடுகின்றோம். நம்மால் சாதிக்க முடியாதது என்ற ஒன்று எதுவும் இல்லை; உதாரணமாக நீங்கள் தொடங்கும் ஒரு செயல் தற்காலிகமாக தோல்வியுறும் போது அதனை கண்டு துவளாமல், தோல்விக்கான காரணத்தை கண்டுபிடித்து விடா முயற்சியுடன் அடுத்த வேலையை தொடங்க வேண்டும். உங்களுக்கு வரும் ஒவ்வொரு சோதனைகளும், சாதனைகளாக மாறும் எப்போது தெரியுமா? நீங்கள் விடா முயற்சியை விதைத்து கொண்டே இருக்கும் போது. விழுந்தவுடன் எழுவது வெற்றி என்றால்... விழுந்தவுடன் எழுந்து கொள்ள நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி தான் விஸ்வரூப வெற்றி!! இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிப் பெற்றிட நியூஸ்டிஎம்-ன் (NewsTM) வாழ்த்துக்கள்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close