வரலாற்றில் இன்று

Last Modified : 01 Jan, 1970 05:30 am
* தமிழக மிருதங்கக் கலைஞர் வேலூர் ஜி.ராமபத்ரன் 1929ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி பிறந்தார். * தமிழக எழுத்தாளர் நா.தர்மராஜன் 1935ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி பிறந்தார். * 1693ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி ஷாம்பைன் ஒயின் கண்டுபிடிக்கப்பட்டது. * 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது. பாரக் ஒபாமாவின் பிறந்த நாள் இன்று * அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா 1961ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள ஹவாயில் பிறந்தார். * இவர் 2008ஆம் ஆண்டு அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சி கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நவம்பர் 6 2012ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் அதிபர் ஆனார். * அதிபராவதற்கு முன் இவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராகப் பணியாற்றினார். * அமெரிக்க வரலாற்றில் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தை சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்குரிய இவர் தனது 56வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close