ஆடி தள்ளுபடி உண்மையா ?

Last Modified : 08 Aug, 2017 02:33 pm

ஆடி மாதம் தொடங்கி விட்டாலே 50% தள்ளுபடி, , ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற ஆடி தள்ளுபடி விளம்பரத்தை டிவியிலும், கடைகளிலும் காண முடிகிறது. அப்படி என்ன இருக்கின்றது இந்த ஆடி மாதத்தில்...!! ஆடி மாத நம்பிக்கைகள் : * கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஆடி மாதத்தில் துணி கடைகளுக்கே செல்லாத நிலை இருந்தது. ஆவணி மாத கல்யாணத்திற்கு கூட ஆடி மாதம் சேலை, துணிமணிகள் எடுக்க மாட்டார்கள். * இதனால் துணிகடைகளில் விற்பனை குறைந்தது. நஷ்டத்தை சரிசெய்ய, துணி கடைகள் செய்த வணிக யுக்தி தான் ஆடி தள்ளுபடி விற்பனை. * ஆடியில் 50% தள்ளுபடி கிடைக்கிறதே, இலவசம் கிடைக்கிறதே, காய்கறிகள் பழங்கள் இலவசமாக கிடைக்கிறதே, என்ற ஆசையினால் வியாபாரிகளின் யுக்தி வெற்றி பெற்றது. அப்போ இந்த 50% விலை குறைப்பு உண்மையா ...? பொதுவாகவே அனைத்து கடை நிறுவனங்களும், தொடர்ந்து வரும் பண்டிகைகளுக்கு புதிய டிசைன்களில் ஆடைகளை இறக்குமதி செய்தாக வேண்டும். இல்லாவிட்டால் அந்த கடையின் வாடிக்கையாளர்கள் வேறு கடைக்கு செல்லும் வாய்ப்பு நேரிடலாம். எனவே பழைய ஸ்டாக்குகளை காலி செய்ய இந்த தள்ளுபடி வியாபாரம் நடைபெறுகிறது. உண்மையாக, சொல்லப் போனால் கடை நிறுவனங்கள் 5 முதல் 15% வரையே விலை குறைப்பு செய்கின்றன. 50% விலை குறைப்பு என்பதே கிடையாது. இதன் மூலம் விற்பனை அதிகரித்து சரக்குகள் காலியாகின்றன. ஆடி தள்ளுபடியில் நீங்கள் கவனிக்க வேண்டியது என்ன? * ஆடி தள்ளுபடியில் அடிமாட்டு விலைக்கு பொருட்கள் வாங்கிவிடலாம் என்று நினைக்காதீர்கள். ஏனெனில், 50% தள்ளுபடி என்பது மிகவும் பழைய துணிகளுக்கே கிடைக்கும். * எத்தனை % தள்ளுபடி என்பதை பொறுத்து ஸ்டாக் துணியா அல்லது புது துணியா என்பதை கண்டுபிடித்துவிடலாம். * தள்ளுபடியில் கிடைக்கிறது என்பதற்காக வெளியூர் செல்லும் இடத்தில் எல்லாம் ஆடித் தள்ளுபடியில் வாங்காமல் முன்னணி நிறுவனம், நம்பிக்கையான தள்ளுபடி என்றால் மட்டுமே வெளியூர்களில் வாங்கலாம். அவசரத்தில் ஆசை ஆசையாக வாங்கிவிட்டு, ஊருக்குப் போனபிறகு ஓட்டை விழுந்திருக்கிறது என்று மீண்டும் கிளம்ப முடியாது. எனவே, உள்ளூரில் வாங்குவதே பொருத்தமானது. * பொதுவாக துணி எடுக்கும் போது பகலில் செல்வது நல்லது. இரவில் இருக்கும் பளபளப்பான வெளிச்சத்தை நம்ப வேண்டாம். * பெரும்பாலான கடைகள் ஆடித்தள்ளுபடியில் வாங்கும் ஆடைகளை திருப்பி வாங்கி, மாற்றி தர ஒத்துக் கொள்வது இல்லை. எனவே வாங்கும் போதே சரியான அளவிலான, நல்ல துணிமணிகளை வாங்கிக்கொள்ள வேண்டும். ஆடி மாதம் முடிய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், ஆடி மாதம் துணி எடுக்கலனா எப்படி ??? போங்க தள்ளுபடி இல்லாம துணிமணி எடுத்து ஜமாய்ங்க...!! ஆடி தள்ளுபடி! ஆடி தள்ளுபடி! ஆடி தள்ளுபடி!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.