கிரிக்கெட்டில் இப்படி ஒரு ரூல்ஸ் இருப்பது தெரியுமா?!!

  jvp   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணியிலும் வீரர்களின் பெயர்வரிசையினைக் கொண்ட போர்டு ஒன்றை அறிவிப்பார்கள். அதில் 11 ஆட்டக்காரர்களின் பெயரும் இருக்கும். இது எல்லோருக்கும் தெரிந்ததே. டாஸ் போடுவதற்கு முன்பாக அன்றைய தினம் விளையாட இருக்கும் பிரதான மற்றும் துணை வீரர்களின் அந்தப் பட்டியலை கமிட்டியிடம் சொல்லி இருக்கவேண்டும். டாஸ் போட்ட பின் அதை மாற்றிக்கொள்ள முடியாது. வீரர்களின் வரிசைப்பட்டியல் இருந்தாலும் அவர்கள் வரிசைப்படிதான் களம் இறங்கவேண்டும் என்பது இல்லை. கேப்டன் எந்த ஆர்டரில் விளையாடச் சொல்கிறாரோ அதன்படி விளையாடலாம். சரி, பிறகு எதற்காக அந்த கட்டாய வரிசை என கேள்வி எழுகிறதுதானே? காரணம் இருக்கிறது. அதாவது ஒரு வீரர் அவுட் ஆகிவிட்டால் அடுத்த 3நிமிடத்திற்குள் அந்தப் பட்டியலில் இருக்கும் அடுத்த வீரர் களமிறங்க வேண்டும். அப்படி அவர் தாமதித்தால் அவர் களமிறங்காமலேயே அவருக்கு ஹிட் விக்கெட் முறையில் அவுட் கொடுக்கப்படும். இப்போது யாரை அவுட் செய்ய வேண்டும் என கேப்டன் தீர்மானிக்க முடியாது. அஃபிசியலாக டாஸ் போடுவதற்கு முன்பாக கமிட்டியிடம் கொடுத்த பட்டியலில் அவுட் ஆனவருக்குப் பிறகு யார் இருக்கிறார்களோ அவர்களுக்கே ஹிட் விக்கெட் முறையில் அவுட் கொடுக்கப்படும். ஆகவே வீரர்களின் பட்டியல் என்பது இந்த விஷயத்தில் மிக மிக முக்கியம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close