முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி பிறந்தநாள் இன்று

Last Modified : 10 Aug, 2017 04:58 am
* இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி 1894ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி ஒடிசாவில் உள்ள பெர்ஹாம்பூரில் பிறந்தார். * 1914-ல் காந்தியை சந்தித்த பிறகு சட்டம் பயில்வதை விடஇ விடுதலைப் போராட்டம் தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்பதுதான் முக்கியம் என்று நினைத்தார். * 1936-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற இவர் மதராஸ் மாகாணத்தின் தொழிலாளர் மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பதவியேற்றார். பிறகு இலங்கைக்கான இந்தியத் தூதர், மத்தியத் தொழிலாளர் துறை அமைச்சர், பல மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றியிருக்கிறார். * அதன்பின் குடியரசுத் துணைத் தலைவர் (1967) குடியரசுத் தலைவர் (1969 இடைக்காலப் பதவி) அதன்பிறகு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்று 1974 வரை அப்பதவியில் இருந்தார். * இந்தியாவில் தொழிலாளர் சங்கங்கள் வளர்ச்சி பெறுவதற்கு அடித்தளமிட்ட இவர் தனது 86-வது வயதில் (1980) மறைந்தார். வரலாற்றில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் : * 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜவஹர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் துவக்கி வைத்தார். * 1927ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்திய வானியலாளர் வைணு பாப்பு சென்னையில் பிறந்தார். * 1821ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி மிசௌரி அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. * 610ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி முகம்மது நபி குர்ஆனை பெற்ற தினம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close