நம் மூளையை பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

Last Modified : 12 Aug, 2017 06:07 pm
நமது உடலில் நூறு சதவீதம் வேலை செய்யும் உறுப்பு மூளை மட்டும் தான். ருசி, வாசனை, தொடு உணர்வு, சிந்தித்தல், பேசுதல் என நம் மூளை ஓயாது எந்நேரமும் வேலை செய்துகொண்டே இருக்கிறது. இது குறித்த சில தகவல்கள் பின் வருமாறு:- * வளர்ந்த மனிதனின் மூளை எடை 1.5 கிலோகிராம். * ஒவ்வொரு வினாடியும் நமது மூளைக்குள் 1 லட்சம் அமில மாற்றங்கள் நமக்குத் தெரியாமலே நடக்கின்றன. * நமது மூளையில் உள்ள ரத்த நாளங்களை விரித்து நீட்டினால், 1 லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு அவை நீளும். * மூளையில் 2 வயதில் தான் மிக அதிக செல்கள் அமைகின்றன. பிறகு அவை குறைய ஆரம்பித்து விடுகின்றன. * மூளை கோடிக்கணக்கான தகவல்களை தனித்தனியாக தனக்குள் தக்க வைத்துக் கொள்கிறது. * 18 வயதில் மனிதனின் மூளை வளர்வதை நிறுத்திக் கொள்கிறது. * நம் மூளை செயல்படும்போது 10 முதல் 23 வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. * மனித உடலில் உள்ள ரத்தத்திலும் ஆக்சிஜனிலும் 20 சதவீதத்தை மூளைதான் பயன்படுத்துகிறது. * மனித மூளை மணிக்கு 431 கி.மீ வேகத்தில் செயல்படக் கூடியது. * வலியை அறியும்போது ஆணின் மூளை வேறு மாதிரியும் பெண்ணின் மூளை வேறு மாதிரியும் செயல்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். * பெண்களுக்கான சிறப்பு ஹார்மோனாக அறியப்படும் ஈஸ்ட்ரோஜன் நினைவுத் திறனை வளர்க்கக் கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால்தான் பெண்கள் அதிக ஞாபகசக்தியோடு இருக்கிறார்கள். * மனிதர்கள் எல்லோருக்குமே கனவுகள் வரும். சிலர் அதை மறந்துவிட்டு கனவு காணுவதில்லை என்று சொல்வதுண்டு. உண்மையில் கனவுதான் மூளையின் உடற்பயிற்சி. நாம் விழிப்புடன் இருப்பதை விட கனவு காணும்போதுதான் மூளை அதிக செயல் திறனுடன் இருக்கிறதாம். * நாம் சிரிக்கும்போது நம் மூளையின் வெவ்வேறு ஐந்து பகுதிகளில் பலமான தாக்கம் ஏற்படுகிறது. * இடதுகை பழக்கம் கொண்டவர்களின் மூளையில் கார்பஸ் கொலாசம் என்ற பகுதி, வலதுகை பழக்கம் கொண்டவர்களை விட 11 சதவீதம் பெரிதாக இருக்கிறது. * சமீபத்திய ஆராய்ச்சிப்படி மூளையை கசக்கிப் பிழியப்படும் டாப் 3 டென்ஷனான வேலைகள் என்றால் அது அக்கவுன்டன்ட், நூலகர், டிரக் டிரைவர் வேலைகள் தானாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close