நொடியில் பட்டா சிட்டா ஆன்லைனில்...!

Last Modified : 16 Aug, 2017 05:54 am

சொத்து பரிமாற்றம் என்பது ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. எனவேதான் இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பட்டா சிட்டா என்றால் என்ன ? * பட்டா என்பது ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ். * சிட்டா என்பது குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம். * அடங்கல் என்பது நிலத்தின் பரப்பு பயன்பாடு கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதியில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம். பட்டா சிட்டா முக்கியத்துவம் : * பல லட்சம் ரூபாய் செலவு செய்து பத்திரங்கள் வாங்கி பதிவு செய்யப்பட்டு தானே சொத்தினை கிரயம் செய்தேன். பிறகு எதற்கு பட்டா வாங்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். உங்கள் சொத்தின் உரிமை குறித்து கேள்வி எழும்போது அந்தச் சொத்தின் தன்மை அளவு அமைவிடம் புல எண் போன்ற எந்த விஷயத்தில் பிரச்சனை என்றாலும் அதனை நீதிமன்றங்கள் தீர்த்து வைப்பது உங்களது கிரயப் பத்திரம் மற்றும் பட்டாவை வைத்துதான். * பட்டா சிட்டா அடங்கல் போன்ற வருவாய்த் துறை ஆவணங்கள்தான் உங்களின் அனுபவத்தையும் நிலத்தின் மீதான உங்களின் ஆளுமையையும் உறுதிப்படுத்தும் ஆவணங்கள். இவை மட்டுமே உங்களின் உரிமையை ஏற்படுத்துவதில்லை என்றாலும் உங்கள் உரிமையை கிரயப்பத்திரத்துடன் சேர்த்து நிலைநாட்டி உங்களைக் காப்பாற்றும் ஆவணங்கள் ஆகும். இனி ஒரு நொடியில் பட்டா சிட்டா ஆன்லைனில் * நிலத்தை வாங்கும் போதோ விற்கும் போதோ வகைபடுத்தப்பட்ட நிலங்களுக்கு தேவையான பட்டாவை ஆன்லைனிலே சரிபார்த்துக்கொள்ளலாம். * ww.tn.gov.in என்ற இணையதளத்தில் இ- சேவை பிரிவு மாவட்ட அலுவலகங்கள் என்ற இணைப்பை கிளிக் செய்து பட்டா அல்லது சிட்டா எண்ணை குறிப்பிடலாம். அல்லது சர்வே எண் அல்லது உட்பிரிவு ஏதாவது இருந்தால் அதனை குறிப்பிட்டு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். சென்னையில் உள்ள சொத்து விவரங்களை சரிபார்த்துக்கொள்ள : * சென்னையில் உள்ள அனைத்து சொத்து விவரங்களையும் ஆன்லைன் மூலமாகவே தெரிந்துக் கொள்ளலாம். * அதற்கு முதலில் சான்றுகள் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் பின்னர் தாலுக்கவை தேர்வு செய்ய வேண்டும். பின்பு பிளாக் நம்பர், தெரு பெயர் சர்வே மற்றும் உட்பிரிவு எண்களை குறிப்பிட வேண்டும். * அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டால் சொத்தின் முகவரி, சர்வே எண், உட்பிரிவு எண், சொத்தின் அளவு என்ன, உரிமையாளரின் பெயர் உள்ளிட்ட அனைத்தும் சரிபார்த்துக் கொள்ளலாம். இனி (நில உரிமை) பட்டா சிட்டா விவரங்கள் தெரிந்துக் கொள்ள ஒரு நொடி போதும்!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.