வரலாற்றில் இன்று 17-8-2017

Last Modified : 01 Jan, 1970 05:30 am
* 1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி இந்திய திரைப்பட இயக்குனர் ஷங்கர் கும்பகோணத்தில் பிறந்தார். * அடிமைத்தனத்துக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய போராளியும் கவிஞரும் கல்வியாளருமான ஷார்லட் லூயிஸ் கிரிம்கீ 1837ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி அமெரிக்காவின் பென்சில் வேனியா மாநிலம் பிலடெல்பியாவில் பிறந்தார். * 1909ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மதன் லால் டிங்கரா மறைந்தார். * 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி முதலாவது இறுவட்டு(ஊனு) ஜெர்மனியில் வெளியிடப்பட்டது. * 1807ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி ராபர்ட் ஃபுல்ட்டனின் முதலாவது அமெரிக்க நீராவிப்படகு நியூயார்க்கில் இருந்து புறப்பட்டது. இதுவே உலகின் முதலாவது வர்த்தக நீராவிப்படகு ஆகும். * 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிலிஃப் கோடு (எல்லைக்கோடு) வெளியிடப்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close