இந்தியாவில் ஐடி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவரின் பிறந்தநாள் இன்று

Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்தியாவின் புகழ் வாய்ந்த தொழிலதிபரும், சமூக சீரமைப்பு, கிராமப்புற மேம்பாடு ஆகிய சமூகப் பணிகளை மேற்கொண்டு வருபவருமான என்.ஆர்.நாராயண மூர்த்தி (N.R.Narayana Murthy) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 20). அவரைப் பற்றிய சிறு தொகுப்பு. * கர்நாடக மாநிலம் மைசூரில் 1946ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி பிறந்த நாராயண மூர்த்தியின் முழுப்பெயர் 'நாகவாரா ராமாராவ் நாராயண மூர்த்தி'. * 1969-ல் கான்பூரில் உள்ள ஐஐடி-யில் மின்னணு பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், 1981-ல் மிக குறைந்த முதலீட்டுடன் சில நண்பர்களுடன் சேர்ந்து 'இன்ஃபோசிஸ்' மென்பொருள் நிறுவனத்தை தொடங்கினார். அடுத்த ஆண்டே தனது இன்ஃபோசிஸ் நிறுவனத்தை பெங்களூரில் நிறுவி, அதனை தலைமை அலுவலகமாக மாற்றினார். * உலகம் முழுவதும் சுமார் 22 நாடுகளில் செயல்படும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். * இவரது தன்னலமற்ற தொண்டுகளைப் பாராட்டி, அமெரிக்காவின் கவுரவம் மிக்க ‘ஹூவர் பதக்கம்’ வழங்கப்பட்டது. இவரது சமூக சேவைகளுக்காக, பத்ம, பத்மவிபூஷன் உள்ளிட்ட விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. நேர்மை, எளிமை, உண்மையை தன் வாழ்க்கையில் பின்பற்றுபவர். * 2002 வரை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்த இவர், தற்போது இக் குழுமத்தின் கவுரவ தலைமை ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். * இந்தியா தற்போது தகவல் தொழில் நுட்பத் துறையில் வல்லரசாகத் திகழ்வதற்கு காரணம் நாராயணமூர்த்திதான் என்று சொல்லலாம். Newtm சார்பில் நாராயணமூர்த்தி-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம் !!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close