ரே பிராட்பரி

Last Modified : 01 Jan, 1970 05:30 am

* அமெரிக்காவின் பிரபல புனைகதை எழுத்தாளர் ரே பிராட்பரி 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலத்திலுள்ள வாகிகன் நகரில் பிறந்தார். * இவர் முழு நேர எழுத்தாளராக 1943-ல் மாறினார். 'டார்க் கார்னிவல்' என்ற இவரது முதல் சிறுகதை தொகுப்பு 1947-ல் வெளிவந்தது. 1950-ல் இவரது பல கதைகள் 'ஈ.சி. காமிக்ஸ்' நிறுவனத்தால் படக்கதைகளாக வெளியிடப்பட்டன. * 1953-ல் வெளியான இவரது 'ஃபாரன்ஹீட் 451' புதினம் உலகப்புகழ் பெற்றது. அமெரிக்க தேசிய கலைப் பதக்கம் சிறப்பு புலிட்சர் பரிசு எம்மி விருது உட்பட பல விருதுகள் பரிசுகளைப் பெற்றுள்ளார். செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் கியூரியாசிட்டி ரோவர் வாகனம் தரையிறங்கிய இடத்துக்கு 'பிராட்பரி லேண்டிங்' என்று இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. * இவர் தினமும் பல மணி நேரம் எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஏறக்குறைய 600 சிறுகதைகள் ஏராளமான கவிதைகள் கட்டுரைகள் திரைக்கதைகள் நாடகங்கள் எழுதியுள்ளார். எழுத்தையே சுவாசித்து வந்த ரே பிராட்பரி 91வது வயதில் (2012) மறைந்தார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close