டாப் 5 - உலகின் மிகப்பெரிய ராணுவங்கள்

  shriram   | Last Modified : 22 Aug, 2017 04:22 pm
இரண்டு உலகப்போர்களையும், நூற்றுக்கணக்கான பிராந்திய போர்களையும் கடந்து வந்துள்ளது மனித இனம். போரின் கொடூரங்கள் குறித்து எத்தனை புத்தகங்களில் படித்தாலும், படங்கள் பார்த்தாலும், அதன் மத்தியில் வாழ்ந்தவர்களுடைய அனுபவத்தை எட்ட முடியாது. இந்தியா - பாகிஸ்தான், அமெரிக்கா - வடகொரியா, இஸ்ரேல் - பாலஸ்தீனம், உட்பட எந்நேரமும் போரை எதிர்பார்த்து காத்திருக்கும் ராணுவ வீரர்கள் லட்சக் கணக்கானோர் உள்ளனர். சமீபத்திய நிகழ்வுகளை பார்க்கும்போது, உலகின் பலம்வாய்ந்த ராணுவங்களை கொண்ட நாடுகள் எவை; போரில் எந்த அளவு இவர்களால் தாக்குப்பிடிக்க முடியும், என்ற கேள்வி தோன்றியது. இதோ உங்களுக்காக அந்த பட்டியல்... 1. சீனா அதிக மக்கள்தொகை கொண்ட சீனா தான், உலகிலேயே அதிக ராணுவ வீரர்களை கொண்ட நாடு. மக்கள் விடுதலை ராணுவம் என்றழைக்கப்படும் சீன ராணுவத்தில் மொத்தம் 23 லட்சம் வீரர்கள் உள்ளனர். ஆனால், தொழில்நுட்பம், ஆயுதங்கள், ஏவுகணைகள் இவற்றை கணக்கிட்டால், அதில் சீன ராணுவம் மூன்றாவது இடத்தில் தான் உள்ளது. 2. அமெரிக்கா உலகின் இரண்டாவது மிகப்பெரிய ராணுவப்படை கொண்டுள்ள நாடு அமெரிக்கா தான், உலகிலேயே மிகவும் பலம்வாய்ந்த ராணுவத்தையும் வைத்துள்ளது. ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்காக 1775ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமெரிக்க ராணுவத்தில் இன்று சுமார் 15 லட்சம் வீரர்கள் உள்ளனர். தற்போது, ஆண்டுக்கு சுமார் 38 லட்சம் கோடி ரூபாய் வரை ராணுவத்திற்காக செலவழிக்கிறது அமெரிக்கா. ஆயுதங்களிலும், தொழில்நுட்பங்களிலும், அமெரிக்காவுக்கு மேல் யாரும் கிடையாது. 3. இந்தியா உலகின் 3வது மிகப்பெரிய ராணுவம் இந்தியாவுடையது. மொத்தம் 13.2 லட்சம் வீரர்கள், தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், அணு ஆயுதங்கள் ஆகியவற்றுடன் பலம்வாய்ந்த நாடுகள் பட்டியலில் 4-வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவின் ராணுவ பட்ஜெட் 3.25 லட்சம் கோடி ரூபாய். 4. வடகொரியா சிறிய நாடாக இருந்தாலும், வடகொரியா சர்வாதிகார ஆட்சியில் இருப்பதனால், அங்கு இளைஞர்கள் ராணுவத்தில் கட்டாயம் பணியாற்ற வேண்டுமென்ற விதி உள்ளது. வெறும் 2.5 கோடி மக்களை கொண்ட அந்நாட்டின் ராணுவத்தில், சுமார் 11 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். இதனால் அது ரஷ்யாவையும் விட அதிகமான வீரர்களை கொண்டுள்ளது. ஆனால், தொழில்நுட்ப ரீதியாக பெரிய முன்னேற்றங்கள் இல்லாததால், பலம்வாய்ந்த ராணுவங்கள் பட்டியலில் 35வது இடத்தில் உள்ளது. 5. ரஷ்யா 8.5 லட்சம் ராணுவ வீரர்களுடன், உலகின் 5வது மிகப்பெரிய ராணுவத்தை கொண்டுள்ளது ரஷ்யா. உலகிலேயே அதிகமான டேங்குகள் மற்றும் அணு ஆயுதங்களை கொண்டுள்ளதால், ராணுவ பலத்தில் அமெரிக்காவுக்கு அடுத்து, இரண்டாவது பெரிய நாடாகவும் ரஷ்யா கருதப்படுகிறது. 6.5 லட்சம் ராணுவ வீரர்களை கொண்ட பாகிஸ்தான் இந்த பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close